News April 13, 2024
புதுவை: வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்காது

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, புதுச்சேரியில் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல்.19 ஆம் தேதி அன்று நடைபெறுகிறது. அன்று அரசு விடுமுறை தினம் என்பதால் ஜிப்மர் மருத்துவமனையின் வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்காது. இந்த தேதியில் வெளிப்புற சிகிச்சை பெற வருவதை தவிர்க்க வேண்டும். அவசர சிகிச்சை பிரிவுகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் புதுவை ஜிப்மர் நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 12, 2026
புதுச்சேரி: வீட்டில் இருந்த மீனவர் உயிரிழப்பு

புதுவை மணவெளி அண்ணா நகர் சேகர் மீனவர், இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்தவர்கள் வெளியில் சென்றபோது, அவர் மட்டும் தனியாக இருந்தார். நாற்காலியில் உட்கார்ந்திருந்த அவர், கீழே விழுந்து சுயநினைவின்றி இறந்து கிடந்தார். புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News January 12, 2026
புதுச்சேரி: கோழி வளர்ப்பு பயிற்சி அறிவிப்பு

புதுச்சேரி அரசு ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலைய புல முதல்வா் முருகவேல் வெளியிட்ட செய்தியில், கிராமப்புற ஆதிதிராவிடா் மக்களுக்கு இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் இந்திய வேளாண் பயோடெக்னாலஜி நிறுவனங்களின் நிதியுதவியுடன், ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், நவீன முறையில் கோழி வளா்ப்பு பயிற்சி 19ஆம் தேதி நடைபெறும் என்றார்.
News January 12, 2026
புதுச்சேரி: புயல் எச்சரிக்கை அறிவிப்பு

புதுச்சேரி, வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகம் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் காரைக்கால் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக குளிர்த்த காற்றுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில் நேற்று காரைக்கால் தனியார் கப்பல் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.


