News April 12, 2024
கடன் தொல்லை நம்மைவிட்டு அகல…

கடன் தொல்லைகளிலிருந்து மீள, குலதெய்வ வழிபாடு உங்களுக்குத் துணை செய்யும். மூன்று பெளர்ணமிகள் தொடர்ந்து குலதெய்வ வழிபாடு செய்துவந்தால் கடன் தொல்லைப் படிப்படியாகக் குறையும். ஆண்டுக்கு ஒருமுறை கட்டாயம் குலதெய்வ கோயிலுக்கு சென்றும் வரவேண்டும். குலதெய்வ கோயில் தூரமாக இருப்பவர்கள் அல்லது குலதெய்வமே தெரியாதவர்கள் ஐந்துமுக விளக்கு வைத்து நெயிட்டு தீபமேற்றி படையலிட்டு வழிபட வேண்டும்.
Similar News
News February 20, 2026
திமுக விருப்ப மனு விநியோகம் தொடங்கியது

தமிழகம் & புதுச்சேரி சட்டமன்றங்களுக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் தொடங்கியுள்ளதாக அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. மேலும், தேர்தல் மேலாண்மை & ஒருங்கிணைப்புக் குழு உள்ளிட்டவற்றை புதுச்சேரி காங்., மற்றும் தொகுதிப் பங்கீடு பற்றி பேச மதிமுகவும் குழு அமைத்துள்ளது. இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
News February 20, 2026
மோடி பெயர் சொல்லி நயினாருக்கு CM பதில்!

அதிரடி விவாதங்கள் நடைபெறும் TN சட்டமன்றத்தில் அவ்வபோது சிரிப்பலைகளும் எழுவதுண்டு. அதன்படி மகளிர் உரிமை தொகை ₹5,000 வழங்கப்பட்டது குறித்து நயினார் பேசினார். அதற்கு பதிலளித்த ஸ்டாலின், இதை பற்றி நீங்கள் அளித்த பேட்டியில், ‘மோடி மஸ்தான் வேலை மாதிரி இருக்கே’ என்றீர்கள். PM மோடியை தான் சொன்னீர்களா என்று தனக்கு சந்தேகம் ஏற்பட்டதாக கூற, எதிர்க்கட்சி MLA-க்கள் உள்பட அவையில் சிரிப்பலை எதிரொலித்தது.
News February 20, 2026
விவசாயிகளிடம் கட்டணம் வசூலிக்கிறார்கள்: செளமியா

நம்முடைய அப்பா, கணவர், அண்ணன், தம்பி, மகன் என அனைவரையும் TN அரசு மதுவுக்கு அடிமையாக்கியுள்ளது என செளமியா அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். வேலூரில் பேசிய அவர், டோல்கேட்களில் வேளாண் விளைபொருட்களை கொண்டு செல்லும் விவசாயிகளிடம் கட்டணம் வசூலிக்கிறார்கள்; ஆனால் கட்சியினர், அரசு அதிகாரிகள் ப்ரீயாக செல்கிறார்கள் என்றும், இதை தடுக்க TN அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் விமர்சித்துள்ளார்.


