News April 12, 2024
நடிகர் அருள்மணி காலமானார்

நடிகர் அருள்மணி (65) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அழகி, தென்றல், தாண்டவகோனே உள்ளிட்ட பல்வேறு படங்களில் திறமையான நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்தார். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட அவரது உடல், அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
Similar News
News November 13, 2025
₹50,000 உதவித்தொகை.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

UPSC முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் UPSC நேர்முகத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களின் வங்கிக் கணக்கில் ₹50,000 நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த உதவித்தொகை பெற விரும்புவோர் இன்று முதல் 24-ம் தேதி வரை naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
News November 13, 2025
மீண்டும் இருப்பிடத்தை மாற்றிய ஓபிஎஸ்!

சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருந்த வீட்டிலிருந்து நந்தனத்திற்கு OPS குடிபெயர்ந்துள்ளார். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது தளத்தில் வீடும், முதல் தளத்தில் ஆபிஸும் செயல்பட உள்ளது. அரசு பங்களாவை காலி செய்த பிறகு ஆழ்வார்பேட்டை, தி.நகர் என அடுத்தடுத்து தனது இருப்பிடத்தை மாற்றி வருகிறார். ஜோதிடத்தில் அதிக ஈடுபாடு கொண்ட OPS, ஜோதிடர் கூறியதன் பேரிலேயே தற்போது வீட்டை மாற்றியதாக கூறப்படுகிறது.
News November 13, 2025
விரைவில் விஜய்யின் சுற்றுப்பயணம்: அருண்ராஜ்

கரூர் துயருக்கு பிறகு, சமீபத்தில் பொதுக்குழுவை கூட்டிய விஜய், கட்சி பணிகளை விரைவுபடுத்தினார். இந்நிலையில், விரைவில் விஜய்யின் சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தவெக அருண்ராஜ் கூறியுள்ளார். கரூர் சம்பவத்திற்கு பிறகும் தமிழக மக்கள், விஜய் மீது வைத்துள்ள அன்பு குறையவில்லை என்றும் தெரிவித்தார். திமுக, பாஜகவை தவிர, தங்கள் தலைமையை ஏற்கும் கட்சிகளை அரவணைப்போம் என்று தெளிவுபடுத்தினார்.


