News April 12, 2024

நடிகர் அருள்மணி காலமானார்

image

நடிகர் அருள்மணி (65) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அழகி, தென்றல், தாண்டவகோனே உள்ளிட்ட பல்வேறு படங்களில் திறமையான நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்தார். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட அவரது உடல், அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

Similar News

News November 11, 2025

பிஹாரில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா?

image

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாக தொடங்கியுள்ளன. சாணக்யா நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக-ஜேடியுவின் NDA கூட்டணி 130 முதல் 138 இடங்கள் வரை வெல்லும் என கணிக்கப்படுகிறது. தேஜஸ்வி தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணி 100 முதல் 108 இடங்களையும், மற்றவை 3-5 இடங்களையும் வெல்ல வாய்ப்புள்ளது. 2 கூட்டணிக்கும் இடையே 30 இடங்களே வித்தியாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

News November 11, 2025

EXIT POLL: பிஹாரில் NDA கூட்டணி 145+

image

பிஹாரில் 140-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் NDA கூட்டணி வெல்லும் என Dainik Bhaskar கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் NDA கூட்டணி 145-160 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. MGB கூட்டணி 73-91 தொகுதிகள் கைப்பற்றும் என்றும் கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. இதர கட்சிகள் 5 முதல் 10 தொகுதிகள் வரை வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 11, 2025

BIHAR EXIT POLL: தேஜஸ்விக்கு இந்த முறையும் வாய்ப்பில்லை

image

பிஹார் தேர்தல் கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் பாஜக கூட்டணிக்கு(NDA) சாதகமாகவே உள்ளன. MATRIZE-IANS உடன் இணைந்து ABP நியூஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் NDA-வுக்கே வெற்றி வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. NDA கூட்டணி 147 முதல் 167 இடங்களை வெல்லும். தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ஆர்ஜேடி-காங்., உள்ளடக்கிய மகாகத்பந்தன் கூட்டணி 70-90 இடங்கள், மற்றவை 0-7 இடங்கள் வெல்ல வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!