News April 11, 2024
தேர்தல் பறக்கும் படை எவ்வாறு செயல்படுகிறது?

தேர்தல் நடத்தை விதி அமலானதும் ரூ.50,000க்கு மேல் மதிப்புள்ள ரொக்கம் அல்லது பொருள்களை கொண்டு செல்வதை பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். ஆவணங்கள் முறையாக இல்லாவிட்டால் அவை பறிமுதல் செய்யப்படும். அதே போல பணப்பட்டுவாடா தொடர்பான புகார் கிடைத்ததும் பறக்கும் படைகள் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்லும். பிறகு 50 நிமிடங்களுக்குள் உதவி தேர்தல் அலுவலருக்கு பறக்கும் படை அறிக்கை அளிக்கும்.
Similar News
News August 12, 2025
தூய்மை பணியாளர்கள் பணிக்கு திரும்ப அரசு உத்தரவு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் தூய்மை பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பணி பாதுகாப்பு, பணப்பலன்களை சென்னை மாநகராட்சி 100 சதவீதம் உறுதி செய்யும் எனவும் அரசு விளக்கம் அளித்துள்ளது. பணிப்பாதுகாப்பு குறித்த உண்மை நிலையினை புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
News August 12, 2025
வனத்தின் பாதுகாவலன்: உலக யானைகள் தினம்!

▶ ஒரு வளர்ந்த யானை ஒரு நாளுக்கு சுமார் 150 கிலோ உணவை உட்கொள்கிறது.
▶யானைகளின் சாணத்தின் மூலம் 50 வகையான தாவரங்கள் காட்டில் விதைக்கப்படுகின்றன.
▶ யானை குட்டிகள் பிறந்த 2 மணி நேரத்தில் நடக்கத் தொடங்கிவிடும்.
▶ ஆப்பிரிக்காவின் சவன்னா வகை யானைகள் தான் உலகின் பெரிய விலங்கினமாம். இதன் எடை 6000 கிலோ▶ யானைகள் அருமையாக நீந்தும் திறன் கொண்டவை. இவற்றால் தொடர்ந்து 6 மணி நேரம் நீந்த முடியும்.
News August 12, 2025
விஜய் வாய் திறந்துவிட்டாரா? தமிழிசை கிண்டல்

எதிர்க்கட்சி MP-க்கள் கைதுக்கு விஜய் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து தமிழிசை, ‘பரவாயில்லையே ஒருவழியாக தம்பி விஜய் வாய் திறந்துவிட்டாரா’ என கிண்டலாக பதிலளித்தார். போராடும் தூய்மைப்பணியாளர்களை பனையூர் அலுவலகத்திற்கு அழைத்து விஜய் பேசியிருக்கிறார்; கூட்டம் வரும் கூட்டம் வரும்னு வெளிய வராம இருந்தா அப்புறம் எதுக்கு அவரு அரசியல் கட்சி தலைவர்? முதலில் மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுக்கட்டும் என்றார்.