News April 11, 2024
தேர்தல் பறக்கும் படை எவ்வாறு செயல்படுகிறது?

தேர்தல் நடத்தை விதி அமலானதும் ரூ.50,000க்கு மேல் மதிப்புள்ள ரொக்கம் அல்லது பொருள்களை கொண்டு செல்வதை பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். ஆவணங்கள் முறையாக இல்லாவிட்டால் அவை பறிமுதல் செய்யப்படும். அதே போல பணப்பட்டுவாடா தொடர்பான புகார் கிடைத்ததும் பறக்கும் படைகள் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்லும். பிறகு 50 நிமிடங்களுக்குள் உதவி தேர்தல் அலுவலருக்கு பறக்கும் படை அறிக்கை அளிக்கும்.
Similar News
News November 11, 2025
‘நாங்கள் இந்தியர்கள்’ கைதான முஜாமிலின் சகோதரர்

ஃபரீதாபாத்தில் வெடிபொருள்கள் வைத்திருந்ததாக கைதான டாக்டர் முஜாமிலின் சகோதரர் ஆசாத் ஷகில், ‘நாங்கள் மனதார இந்தியர்கள், இந்தியாவுக்காக கல்வீச்சுக்கு ஆளானோம்’ என்று கூறியுள்ளார். எல்லோரும் அவரை ஒரு பயங்கரவாதி என்று குற்றம் சாட்டுகிறார்கள், ஆனால் எங்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இச்சம்பவத்தால், தனது சகோதரியின் திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
News November 11, 2025
ஹை அலர்ட்டில் பாகிஸ்தான்

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, இந்தியா பதிலடி கொடுக்கலாம் என பாக்., உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனையடுத்து, பாக்., ராணுவம் தனது அனைத்து விமானப்படை தளங்கள், விமான நிலையங்களுக்கும் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. மேலும், ராணுவம், கடற்படை, விமானப்படை மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும், தற்போதைய சூழலை உன்னிப்பாக கண்காணிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
News November 11, 2025
வந்தாச்சு குழந்தைகளுக்கான UPI.. இனி டென்ஷன் இல்ல!

குழந்தைகளுக்கு தனி வங்கி கணக்கு தொடங்காமல், UPI பரிவர்த்தனை செய்ய Junio UPI Wallet என்ற திட்டத்தை RBI அறிமுகப்படுத்துகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனை குறித்து குழந்தைகள் அறிய இது உதவும் என நம்பப்படுகிறது. இந்த Wallet பெற்றோரின் வங்கி கணக்குடன் இணைக்கப்படும். ஆகவே செலவு வரம்பு, பரிவர்த்தனை எதற்காக, எத்தனை முறை, எவ்வளவு செலவிடப்படுகிறது போன்றவை பெற்றோரின் கட்டுப்பாட்டில் இருக்கும்.


