News April 10, 2024
எந்த விசாரணைக்கும் ஆஜராக தயார்

போதைப்பொருள் வழக்கு தொடர்பாக எந்த விசாரணைக்கும் ஆஜராக தயார் என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். மதுரையில் ரம்ஜான் சிறப்பு தொழுகையில் பங்கேற்ற அவர், அமலாக்கத்துறை விசாரணை நேர்மையாக நடப்பதாகவும், அழுத்தம் காரணமாக விசாரணை நடக்கிறதா? என்பது தெரியவில்லை எனவும் கூறினார். மேலும், இறைவன் மிகப்பெரியவன் என்றும், தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை பொய் என நிரூபிப்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News November 7, 2025
ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு.. அமைச்சர் அறிவிப்பு

பொங்கலை முன்னிட்டு டிச.5-ம் தேதி முதல் விலையில்லா வேட்டி, சேலை வழங்கப்படும் என அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை CM ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாகவும், அதன்பிறகு தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் வேட்டி, சேலை விநியோகம் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல், பச்சரிசி, வெல்லம், கரும்பு, பரிசுத் தொகை உள்ளிட்டவை வழங்குவது தொடர்பான அறிவிப்பும் விரைவில் வெளியாகலாம்.
News November 7, 2025
மேல் நோக்கி சுடும் துப்பாக்கி குண்டுகள் எங்கே போகும்?

வானத்தை நோக்கி Gunfire செய்யும்போது மேலே செல்லும் புல்லட், பின் ஈர்ப்பு விசையால் மீண்டும் கீழே விழும். அப்போது அங்கு யாராவது இருந்தால் அவர்களுக்கு காயம் ஏற்படலாம். ஆனால் ராணுவ மரியாதைக்காக வானத்தை நோக்கி சுடப்படும் குண்டுகளால் காயம் ஏற்படாது. காரணம், அப்போது பயன்படுத்தப்படும் தோட்டாவில் வெடிமருந்து இருக்காது. அது வெறும் காலி கார்ட்ரிட்ஜ் மட்டுமே. அதனால் சத்தமும் புகையும் மட்டுமே வரும். SHARE.
News November 7, 2025
விஜய்யை முதல்முறையாக விமர்சித்த அதிமுக

திரைப்புகழைக் கொண்டு சிலர் மாய பிம்பத்தை உருவாக்குவதாக, விஜய்யை மறைமுகமாக கே.பி.முனுசாமி விமர்சித்துள்ளார். மக்களுடன் நேரடி தொடர்பு இல்லாமல் கட்டமைப்பை உருவாக்கிவிட்டதாக சிலர் நினைக்கின்றனர் எனவும் அவர் சாடியுள்ளார். தவெக தலைமையில் தான் கூட்டணி என விஜய் திட்டவட்டமாக அறிவித்ததால், விஜய்யை தாக்கி பேச அதிமுக தலைவர்கள் தொடங்கிவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.


