News September 4, 2025
நன்மைகளை வாரி வழங்கும் ஆவாரம் பூ தேநீர்!

ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஆவாரம்பூ தேநீர் உதவும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆவாரம் பூ பொடி, கருப்பட்டி, ஏலக்காய், மிளகு ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். அடுப்பில், தண்ணீர் கொதி வந்ததும் அதில் இஞ்சி, ஆவாரம் பொடி கலவையை சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு வடிகட்டி குடித்தால் உடல் புத்துணர்ச்சியோடு இருக்கும். SHARE IT.
Similar News
News September 5, 2025
செங்கோட்டையனை பொருட்படுத்தாத EPS

செங்கோட்டையன் கிளப்பிய புயலுக்கு மத்தியில் EPS தனது மக்கள் சந்திப்பு பயணத்தை தொடர்ந்தார். பிரிந்து சென்றவர்களை அதிமுகவில் மீண்டும் சேர்க்க வேண்டும் என செங்கோட்டையன் கெடு விதித்தது EPS-க்கு நெருக்கடியாக பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பரப்புரையில் திமுகவை சாடுவதிலேயே குறியாக இருந்தார். OPS, TTV விஷயத்தில் EPS உறுதியாக இருப்பதால், செங்கோட்டையனை பொருட்படுத்த மாட்டார் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
News September 5, 2025
அடுத்து GST 3.0.. நிர்மலா சீதாராமன் பகிர்ந்த தகவல்

சாதாரண மக்களின் சுமைகளை குறைப்பதற்காகவே GST 2.0 கொண்டுவரப்பட்டதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதேபோல், வருங்காலத்தில் GST 3.0-ஐ கொண்டு வர இருப்பதாகவும், இதனால் பொருள்களின் விலை மேலும் வெளிப்படைத்தன்மையோடு இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், சிறு, குறு தொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில், GST 3.0 செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
News September 5, 2025
4 முதல்வர்களுக்கு பாடல் எழுதிய செங்குட்டுவன்

தமிழ்நாட்டின் 4 முதல்வர்களுக்கு பாடல் எழுதிய பெருமை கவிஞர் <<17624214>>பூவை செங்குட்டுவனுக்கு<<>> உண்டு. அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதாவிற்கு அரசியல் பாடல்களையும், எம்.ஜி.ஆருக்கு சினிமா பாடல்களையும் எழுதியுள்ளார். இவரது கவி திறனுக்காக கடந்த 1980-ல் தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது அளித்து கௌரவப்படுத்தியது. இதுபோக, கண்ணதாசன் விருது, கவிஞர் திருநாள் விருது, மகாகவி பாரதியார் விருதுகளையும் வாங்கியுள்ளார்.