News September 3, 2025
BREAKING:’செங்கோட்டையன் திமுகவுக்கு வந்தால் ஏற்போம்’

செப்.5-ல் மனம் திறந்து பேச இருப்பதாக, அதிமுகவை பரபரப்பாக்கி இருக்கிறார் செங்கோட்டையன். அவரது நகர்வுகளை பிற கட்சிகளும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இந்நிலையில், செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் முத்துசாமி, மற்ற கட்சிகளில் இருந்து வருபவர்களை திமுக வரவேற்கும் எனத் தெரிவித்துள்ளார். மற்ற கட்சிகளில் குழப்பம் ஏற்படுத்தும் நோக்கம் திமுகவிற்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News March 12, 2026
கிருஷ்ண துளசி vs ராம துளசி! வீட்டில் எது இருக்கணும்?

ராம துளசி பச்சை நிறத்திலும், கிருஷ்ண துளசி ஓரளவு பழுப்பு மற்றும் ஊதா நிறத்திலும், குடை வடிவத்திலும் காணப்படுகிறது. ராம துளசி மிகவும் லேசான நறுமணத்தை கொண்டுள்ளது, அதே நேரத்தில் கிருஷ்ண துளசி மிகவும் வலுவான நறுமணத்தை கொண்டுள்ளது. வீட்டின் வடகிழக்கு திசையில், கிருஷ்ண துளசியை நடுவது வீட்டின் நிதி நிலைமையை பலப்படுத்தும் என நம்பப்படுகிறது. இத்தகவலை அனைவருக்கும் பகிரவும்.
News March 12, 2026
விஜய்யை எதிர்த்து களமிறங்கும் திமுக வேட்பாளர் யார்?

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் போட்டியிட போவதாக தவெக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இதையடுத்து அவரை எதிர்த்து போட்டியிட தகுதியான வேட்பாளரை தேடும் வேட்டையில் திமுக இறங்கியுள்ளதாம். அதன்படி வடசென்னையில் பலமாக உள்ள சேகர்பாபு பெரம்பூரிலும், கிறிஸ்துவ சமயத்தை சேர்ந்த இனிகோ ருதயராஜை திருச்சி கிழக்கிலும் வேட்பாளராக களமிறக்க திட்டமிட்டுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News March 12, 2026
PM மோடிக்கு தமிழகத்துடன் தொப்புள் கொடி உறவு: TTV

திருச்சி பொதுக்கூட்டத்தில் TTV தினகரன் பேசியது கவனம் பெற்றுள்ளது. PM மோடி டெல்லியில் இருந்து ஆட்சி செய்தாலும், அவர் குஜராத்தை சேர்ந்தவர்; குஜராத் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்துடன் தொடர்பு கொண்ட நிலம் என்றார். பாரி, அதியமான் போன்ற வேளிர் இனத்தை சேர்ந்த திராவிட மன்னர்கள் ஆட்சி செய்த பகுதியை சேர்ந்தவர் மோடி எனவும், TN-க்கும், PM மோடிக்கும் தொப்புள் கொடி உறவு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.


