News September 3, 2025
BREAKING:’செங்கோட்டையன் திமுகவுக்கு வந்தால் ஏற்போம்’

செப்.5-ல் மனம் திறந்து பேச இருப்பதாக, அதிமுகவை பரபரப்பாக்கி இருக்கிறார் செங்கோட்டையன். அவரது நகர்வுகளை பிற கட்சிகளும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இந்நிலையில், செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் முத்துசாமி, மற்ற கட்சிகளில் இருந்து வருபவர்களை திமுக வரவேற்கும் எனத் தெரிவித்துள்ளார். மற்ற கட்சிகளில் குழப்பம் ஏற்படுத்தும் நோக்கம் திமுகவிற்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News November 11, 2025
ALERT: தங்கம் விலை தடாலடியாக மாறுகிறது

24 காரட் தங்கம் 10 கிராம்- ₹1.25 லட்சம், வெள்ளி 1 கிலோ ₹1.55 லட்சம் என விலை மீண்டும் உச்சம் தொட்டுள்ளது. USA ஃபெடரல் வங்கி, வட்டியை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு, பலவீனமான US டாலர், அமெரிக்க அரசின் ஷட் டவுன் மற்றும் சர்வதேச பிரச்னைகள் காரணமாக அனைவரும் தங்கத்தை வாங்கிக் குவிக்கின்றனர். அவ்வப்போது சற்று குறைந்தாலும், அடுத்த ஆண்டுவரை உயர்வு தொடரும் எனக் கணிக்கப்படுகிறது. ஆகவே கவனமா முடிவெடுங்க.
News November 11, 2025
இந்த நாடுகளின் பழைய பெயர்கள் தெரியுமா?

இப்போது நமக்கு பரிச்சயமான பல நாடுகள், முன்பு வேறு பெயர்களில் அழைக்கப்பட்டன. அவற்றில் சில: *ஜப்பான் – நிப்பான் *ஸ்ரீலங்கா – சிலோன் *தாய்லாந்து – சயாம் *ஈரான் – பெர்சியா *எத்தியோப்பியா – அபிசீனியா *இராக் -மெசபடோமியா *மியான்மர்- பர்மா *தைவான்- ஃபார்மோசா *கானா- கோல்ட் கோஸ்ட் *ஜிம்பாப்வே -தெ.ரொடீசியா உங்களுக்கு தெரிந்த வேறு நாடுகள், நகரங்களின் பழைய பெயர்களை கமெண்ட் பண்ணுங்க.
News November 11, 2025
டெல்லி சம்பவம்… பின்னணியில் காங்கிரஸா? பொன்னார்

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் மிகப்பெரிய சதி இருப்பதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். அங்கு குண்டுவைத்தது காங்கிரஸ்காரர் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டிய அவர், இன்னும் 2 நாள்களில் இதுபற்றி தெரிய வரும் என்று தெரிவித்துள்ளார். இதில் காங்கிரஸிற்கு என்ன ரோல்? குறிப்பாக ராகுல் காந்திக்கு என்ன ரோல்? என்பதெல்லாம் வெளிவரும் என்றும் அவர் பேசியுள்ளார்.


