News September 3, 2025
பொய் பரப்புவதே Fulltime வேலை: உதயநிதி சாடல்

பொய் செய்திகளை பரப்புவதையே முழு நேர வேலையாக பாசிச கும்பல் செய்து வருவதாக DCM உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார். மக்களை குழப்ப வேண்டும், அவர்களின் அறிவை மழுங்கடிக்க வேண்டும் என்பதையே நோக்கமாக கொண்டு செயல்படுபவர்களை, தவிர்க்க வேண்டும் எனவும் உதயநிதி வலியுறுத்தியுள்ளார். யார் பொய் செய்திகளை பரப்புகின்றனர் என சொல்ல தேவையில்லை எனவும் உதயநிதி தெரிவித்துள்ளார். யார சொல்றாரு?
Similar News
News September 7, 2025
விஜய்யால் தாக்கம் ஏற்படுத்த முடியாது: ராஜகண்ணப்பன்

தனியாக நிற்கும் விஜய்யால் அரசியலில் ஒன்றும் செய்ய முடியாது என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். யார் வேண்டுமானாலும் மாநாடு நடத்தலாம். ஆனால், அதில் பங்கேற்கும் சிறுவர்களால் ஓட்டு போட முடியாது என அவர் விமர்சித்துள்ளார். மேலும், திடீரென வந்து அரசியல் செய்வது சாதாரணமல்ல என்றும் கூறியுள்ளார். நீங்க என்ன நினைக்குறீங்க?
News September 7, 2025
RECIPE: உடல் எடை குறைக்க உதவும் ‘கம்பு இட்லி’

◆உடல் எடையை குறைக்க, சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த ‘கம்பு இட்லி’ உண்ணலாம் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
➥கம்பு, இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
➥இவற்றை கிரைண்டரில் இட்லி பதத்திற்கு அரைத்து எடுக்கவும்.
➥பிறகு கடாயில், எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து மாவு கலவையில் சேர்த்தால், இட்லி மாவு ரெடி. இதை இட்லியாக்கி சுட சுட சாப்பிடுங்க. SHARE IT.
News September 7, 2025
திமுகவுடன் கூட்டணி இல்லை.. உறுதி செய்தார்

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என பிரேமலதா அதிரடியாக கூறியுள்ளார். கீழ்பெண்ணாத்தூர் பரப்புரையில் பேசிய அவர், ஒரு பெண்ணாக மக்கள் படும் இன்னல்களை அறிய முடிவதாகவும் கூறியுள்ளார். இதன்மூலம், DMDK, DMK அணியுடன் செல்லவில்லை என்பதை உறுதி செய்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். அதேநேரம், ADMK, TVK இவை 2-ல் எந்த பக்கம் செல்வார்கள் என்பதையும் கணிக்க முடியவில்லை.