News September 3, 2025
பொய் பரப்புவதே Fulltime வேலை: உதயநிதி சாடல்

பொய் செய்திகளை பரப்புவதையே முழு நேர வேலையாக பாசிச கும்பல் செய்து வருவதாக DCM உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார். மக்களை குழப்ப வேண்டும், அவர்களின் அறிவை மழுங்கடிக்க வேண்டும் என்பதையே நோக்கமாக கொண்டு செயல்படுபவர்களை, தவிர்க்க வேண்டும் எனவும் உதயநிதி வலியுறுத்தியுள்ளார். யார் பொய் செய்திகளை பரப்புகின்றனர் என சொல்ல தேவையில்லை எனவும் உதயநிதி தெரிவித்துள்ளார். யார சொல்றாரு?
Similar News
News November 8, 2025
’24’ சூர்யாவை காப்பியடித்தாரா ராஜமெளலி?

24 படத்தின் சூர்யா (ஆத்ரேயா) கதாபாத்திரத்தை ராஜமெளலி காப்பியடித்துள்ளதாக SM-ல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ‘Globetrotter’-ல் பிருத்விராஜின் கும்பா என்ற கதாபாத்திர போஸ்டர் வெளியானது. இதை பார்த்ததும் அதே வீல் சேர், முடக்குவாதமான வில்லன் என 24 ஆத்ரேயா கதாபாத்திரம் ரசிகர்களுக்கு நினைவு வந்தது. ஆனால், அது அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்கின் பிரதிபலிப்பு என்று டோலிவுட் வட்டாரம் சப்பை கட்டு கட்டுகிறது.
News November 8, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துவினையாடல்
▶குறள் எண்: 513
▶குறள்:
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு.
▶பொருள்: நிர்வாகத்தின் மேல் அன்பு, நிர்வாகத்திற்கு நன்மை தருவதை அறியும் அறிவு, அதற்கான செயல்களைச் செய்யும்போது உறுதி, பணியில் பொருள் வந்தால் அதன்மீது ஆசை இன்மை இந்த நான்கையும் உடையவனிடத்தே பதவி தருவதுதான் தெளிவு.
News November 8, 2025
அதிமுக தொண்டர்கள் கண்ணீர் விடுகின்றனர்: OPS

அதிமுக ஒன்றுபட வேண்டுமென 2 கோடி தொண்டர்களும் கண்ணீர் விட்டு அழுகின்றனர் என OPS கவலை தெரிவித்துள்ளார். சொந்த விருப்பு, வெறுப்பாக கட்சி ஒன்றுபடுவதை தடுக்கிறார் என்றும், அதிமுக ஒன்றுபட வேண்டுமென PM மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் நினைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எம்.ஜி.ஆர் உருவாக்கிய விதியை மாற்றியவர் தான் EPS என்று OPS சாடியுள்ளார். மேலும், அதிமுகவில் சேர எந்த பதவியையும் கேட்கவில்லை என்று பேசியுள்ளார்.


