News April 9, 2024
ஐதராபாத் 2 ரன்னில் த்ரில் வெற்றி

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய ஐதராபாத் 182 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் நிதிஷ் ரெட்டி 64 ரன்கள் எடுத்தார். பின்னர் ஆடத்துவங்கிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 180 ரன்கள் எடுத்தது. சஷாங்க் சிங் 46, அசுதோஷ் சர்மா சர்மா 33 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவரில் இருவரும் ருத்ர தாண்டவம் ஆடிய நிலையிலும், வெற்றி இலக்கை அவர்களால் எட்ட முடியவில்லை.
Similar News
News August 12, 2025
பெண் கையை பிடித்து இழுத்தால் குற்றமா? தீர்ப்பு

திருமணமாகாத மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்த வழக்கில் முருகேசன் என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், ஒரு ஆண் எந்தவித உள்நோக்கமும் இல்லாமல் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்திருப்பது குற்றமாகாது எனக்கூறி 3 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்து ஐகோர்ட் மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.
News August 12, 2025
ஒடிசாவில் தேர்தல் முறைகேடு: பிஜு ஜனதா தளம் புகார்

ஒடிசாவில் நடத்த லோக்சபா, சட்டமன்ற தேர்தல்களில் பெரும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. ஒடிசாவில் 21 நாடாளுமன்ற தொகுதிகளில் இயந்திரத்தில் பதிவான வாக்குகளை விட அதிக வாக்குகள் எண்ணப்பட்டுள்ளதாக BJD தெரிவித்துள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் ECI கண்டுகொள்ளவில்லை என தெரிவித்துள்ள BJD, கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
News August 12, 2025
புதிய பாதையில் இந்திய கிரிக்கெட் அணி!

நடுத்தரவர்க்க, மாநகரவாசிகளின் அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, இன்று அனைத்து தரப்புக்குமானதாக மாறிவருகிறது. சமீபத்திய தொடரில், ஒவ்வொரு டெஸ்ட்டிலும் குறைந்தது 8 வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். லார்ட்ஸில் அதிகபட்சமாக 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள் களமிறங்கினர். கில்(Sikh) வழிநடத்தும் அணியின் வேகப்பந்து வீச்சுப் படைக்கு பும்ரா(Sikh), சிராஜ்(Muslim) தலைமை ஏற்றுள்ளனர்.