News April 9, 2024
அமெரிக்காவில் தொடரும் இந்திய மாணவர்களின் மரணம்

அமெரிக்காவில் மாயமான இந்திய மாணவர் முகமது அப்துல் அர்பாத் (25) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. கடந்த 6ஆம் தேதி கிளீவ்லாந்தில் படித்து வந்த உமா சத்ய சாய் கட்டே என்பவர் 10ஆவது நபராக மர்மமான முறையில் இறந்துள்ளார். இதனால் ஏற்பட்டுள்ள பரபரப்பு அடங்குவதற்குள் அதே பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்ட மேற்படிப்பு படித்து வந்த அர்பாத் மர்மமான முறையில் இறந்துள்ளார்.
Similar News
News March 4, 2026
நாட்டின் பணக்கார மாவட்டங்களின் டாப் 5 லிஸ்ட்!

தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் நாட்டில் பணக்கார மாவட்டம் எது என்ற பட்டியல் வெளிவந்துள்ளது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தின் வரையிலான கணக்கீடாகும். இதில் எந்தெந்த மாவட்டங்கள் டாப்பில் இருக்கின்றன என்பதை அறிய மேலே உள்ள போட்டோவை இடது புறமாக Swipe செய்யவும். நீங்க மட்டும் இந்த தகவலை தெரிஞ்சிக்காம, நண்பர்களுக்கும் அதிகளவில் ஷேர் பண்ணுங்க.
News March 4, 2026
கூட்டணி முடிவு… பின்வாங்கினார்

தனிநபர்களுக்கு இடையே வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் கட்சி என்பது அனைவரை விடவும் பெரியது என மாணிக்கம் தாகூர் எக்ஸ்-ல் பதிவிட்டுள்ளார். கூட்டணி விவகாரத்தில் தலைமை எந்த முடிவு எடுத்தாலும், அதை ஒழுக்கத்துடன் ஏற்றுக்கொள்வேன் என்ற அவர், ஒற்றுமை மிகப்பெரிய பலம் எனவும் கூறியுள்ளார். இந்நிலையில், இதுவரை திமுகவை சீண்டி வந்த மாணிக்கம் தாகூர் தற்போது பின்வாங்கியிருப்பது ஏன் என கேள்வி எழுப்பிவருகின்றனர்.
News March 4, 2026
சற்றுமுன்: விலை சரசரவென குறைந்தது

நாமக்கல்லில் முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ஒரே நாளில் 30 காசுகள் குறைந்துள்ளது. நேற்று மொத்த விலையில் முட்டை ஒன்று ₹4.60-க்கு விற்பனையான நிலையில், இன்று 30 காசுகள் குறைந்து ₹4.30-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக துபாய், கத்தார், ஓமன் போன்ற நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி அடியோடு நிறுத்தப்பட்டதால், விலை கணிசமாக சரிந்துள்ளது.


