News August 31, 2025
BREAKING: இன்று நள்ளிரவு முதல் உயருகிறது

➤விக்கிரவாண்டி, மேட்டுப்பட்டி, எலியார்பத்தி, வீரசோழபுரம், புதூர் பாண்டியாபுரம், நத்தக்கரை, அரவக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, விஜயமங்கலம் உள்ளிட்ட <<17567611>>டோல்களின் கட்டணம்<<>> இன்று நள்ளிரவு முதல் உயர்த்தப்படுகிறது. ➤SBI-ல் Auto Debit முறை தோல்வியடைந்தால் 2% அபராதம். ➤LPG சிலிண்டர் விலை மாற்றம் குறித்து காலை (செப்.1) அறிவிக்கப்படும். ➤வெள்ளியிலும் ஹால்மார்க் முத்திரையிடுவதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது. SHARE.
Similar News
News September 3, 2025
பள்ளி மாணவர்களுக்கு மாதம் ₹1,500.. உடனே இதை பண்ணுங்க

அரசு பள்ளி மாணவர்களுக்கு ₹1,500 வழங்கும் கல்வி உதவித் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க நாளையே(செப்.4) கடைசி. இதற்கான திறனறித் தேர்வு அக்.11-ம் தேதி நடைபெறவுள்ளது. www.dge.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து, அதனை நிரப்பி ₹50 கட்டணத்துடன் பள்ளி HM-களிடம் கொடுக்க வேண்டும். இந்த திட்டத்தில் தேர்வாகும் 1,500 மாணவர்களுக்கு 2 ஆண்டுகள் மாதந்தோறும் ₹1,500 அரசு வழங்கி வருகிறது. SHARE IT.
News September 3, 2025
BRS கட்சியிலிருந்து விலகுகிறேன்: கவிதா

BRS கட்சி மற்றும் MLC பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக கவிதா அறிவித்துள்ளார். தன் தந்தை சந்திரசேகர ராவுக்கு அழுத்தம் கொடுத்ததால், தன்னை கட்சியில் இருந்து <<17591580>>நீக்கியதாகவும்<<>>, எனினும் தந்தையின் முடிவை தான் மதிப்பதாகவும் தெரிவித்துள்ளார். 20 ஆண்டுகளாக கட்சிக்கு உழைத்த தன்னை இப்போது யார் என்று கேள்வி கேட்பதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். கவிதா <<17596611>>தனிக்கட்சி<<>> தொடங்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
News September 3, 2025
உங்களை நாய் கடித்தால் உடனே இத பண்ணுங்க!

நாய்கள் கடித்துவிட்டால், என்ன செய்ய வேண்டும் என டாக்டர்கள் சொல்லும் அறிவுரையை கேளுங்க. காயம் ஏற்பட்ட இடத்தை 15 நிமிடங்களாவது Running water-ல் காயத்தை கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து, 5 டோஸ் கொண்ட PEP எனப்படும் ரேபிஸ் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். உடனடியாக இந்த ஊசியை போட்டுக் கொள்ள வேண்டியது அவசியமானது. தடுப்பூசியை போட தாமதித்தால், அது உயிரிழப்பு வரை செல்லலாம். SHARE IT.