News April 9, 2024
என்ஐஏ அதிகாரிகளுக்கு காவல்துறை நோட்டீஸ்

மேற்கு வங்கத்தில் சோதனைக்கு சென்ற என்ஐஏ அதிகாரிகளை பெண்கள் தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்பந்தப்பட்ட என்ஐஏ அதிகாரிகளுக்கு மாநில காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த சம்பவத்தில் காயம் அடைந்த அதிகாரிக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ள போலீசார், விசாரணையின்போது மருத்துவ அறிக்கைகளை எடுத்து வரும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
Similar News
News November 6, 2025
ரஜினிக்கு கமல் எழுதிய லெட்டர்… மடல்… இல்ல கடுதாசி!

சினிமாவில் ரஜினியுடன் மீண்டும் இணைவதை உறுதிப்படுத்தி, ரஜினிக்கு கமல் X-ல் பதிவிட்டுள்ள கடிதம் வைரலாகி வருகிறது. அதில், ‘அன்புடை ரஜினி, காற்றால் அலைந்த நம்மை இறக்கி இறுக்கி தனதாக்கியது, சிகரத்தின் இரு பனிப் பாறைகள் உருகிவழிந்து இரு சிறு நதிகளானோம். மீண்டும் நாம் காற்றாய் மழையாய் மாறுவோம். நம் அன்புடை நெஞ்சார நமைக் காத்த செம்புலம் நனைக்க, நாமும் பொழிவோம் மகிழ்வோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
News November 6, 2025
ராசி பலன்கள்(06.11.2025)

➤மேஷம் – புகழ் ➤ரிஷபம் – பொறுமை ➤மிதுனம் – விவேகம் ➤கடகம் – வாழ்வு ➤சிம்மம் – தடங்கல் ➤கன்னி – பாராட்டு ➤துலாம் – தோல்வி ➤விருச்சிகம் – கவனம் ➤தனுசு – சுகம் ➤மகரம் – முயற்சி ➤கும்பம் – சுபம் ➤மீனம் – வெற்றி
News November 6, 2025
பழிவாங்குகிறதா பாம்பு? ஒரு மாதத்தில் 7 முறை கடி

தெலங்கானாவில் 28 வயதான இளைஞரை, ஒரு மாதத்தில் 7 முறை பாம்பு கடித்த விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. முதல்முறை கடித்ததும் உடனடியாக சிகிச்சை மேற்கொண்டு உயிர்பிழைத்த அந்நபர் வீட்டுக்கு திரும்பியதும், மீண்டும் மீண்டும் பாம்பு கடித்துள்ளது. இதில் பீதியடைந்த அந்நபர், பாம்பு தன்னை பழிவாங்குவதாக எண்ணி புலம்பி வருகிறார். உண்மையில் சில வகை பாம்புகள் பழிவாங்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.


