News April 9, 2024

பாஜக பெண் நிர்வாகி கைது

image

சென்னையில் போலி ஆவணம் சமர்ப்பித்து தேர்தல் பணிமனை திறந்த பாஜக பெண் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலத்தில் வீட்டின் உரிமையாளர் பெயரில் போலி ஆவணம் கொடுத்து மீனாட்சி என்ற அப்பெண், பணிமனையை திறந்துள்ளார். இதுகுறித்து எழுந்த புகாரையடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து, பாஜக மண்டல தலைவர் மருதுபாண்டி வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News March 17, 2026

ஈரானின் முக்கிய தலைவர் அலி லரிஜானி கொலை

image

ஈரானின் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்ட பிறகு அந்நாட்டை நிர்வகித்து வந்த தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் அலி லரிஜானியும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஈரானில் தங்களுக்கு சாதகமான அரசை அமைக்க விரும்பும் அமெரிக்காவும், இஸ்ரேலும் அங்குள்ள தலைவர்கள் தான் தங்கள் முதல் டார்கெட் என கூறும் நிலையில், லரிஜானி கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஈரானிடமிருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

News March 17, 2026

BREAKING: விஜய் போட்டியிடும் தொகுதி இதுதான்!

image

விஜய் எந்த தொகுதியில் களமிறங்குவார் என்பதை அறிய தவெக தொண்டர்கள் ஆர்வமாக உள்ளனர். பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் அவர் போட்டியிட இருப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியானது. தற்போது, பெரம்பூரில் விஜய் களமிறங்க இருப்பது உறுதியாகியுள்ளது. அந்த தொகுதியில் குளிர்சாதன வசதியுடன் தவெக அலுவலகம் அமைக்கப்பட்டு வருகிறது. விஜய்க்காகவே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!