News April 9, 2024
இலக்குகளை பாஜக எட்டியதில்லை

400 தொகுதிகளை வெல்ல வேண்டுமென்ற பாஜகவின் இலக்கு குறித்து கருத்து தெரிவித்த ஜெய்ராம் ரமேஷ், இலக்குகளை பாஜக எட்டியதில்லை என்பதே வரலாறு என்றார். 2017 குஜராத் தேர்தலில் இலக்கு 150 சீட், வென்றது 99 சீட். 2018 சத்தீஸ்கர் தேர்தலில் இலக்கு 50 சீட், வென்றது 15 சீட். 2019 ஜார்கண்ட் தேர்தலில் இலக்கு 65 சீட், வென்றது 25 சீட். 2021 தமிழ்நாடு தேர்தலில் இலக்கு 118 சீட், வென்றது வெறும் 4 சீட் மட்டுமே என்றார்.
Similar News
News January 15, 2026
தேர்தல் நோக்கத்தோடு விஜய் இதை சொல்கிறார்: தமிழிசை

தேர்தல் நெருங்குவதால் தை மாதத்தில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை சொன்னாரா விஜய் என தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். வெற்றிப் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என விஜய் <<18861926>>பதிவிட்டதை<<>> குறிப்பிட்ட அவர், சித்திரை மாதம் தான் தமிழ்ப் புத்தாண்டு என்றார். மேலும், விஜய்தான் தவறாக எண்ணி கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News January 15, 2026
ஈரானில் 3,428 பேர் பலி.. நாடே துக்கத்தில் ஆழ்ந்தது

உலகெங்கும் பல இடங்களில் நடைபெற்று வரும் போரால் மரண ஓலங்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. குறிப்பாக, ஈரானை நிலைகுலையச் செய்துவரும் உள்நாட்டு போரில் இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 3,428 ஆக உயர்ந்துள்ளது. அரசுக்கு எதிரான போரில் ஜென் Z தலைமுறையினரின் தீவிர போராட்டத்தில் பொதுமக்களும் சிக்கி உயிரிழந்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஈரான் மனித உரிமைகள் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
News January 15, 2026
ஏன் ஜன.15 ராணுவ தினமாக கொண்டாடப்படுகிறது?

ஏப்ரல் 1, 1895-ல் இந்திய ராணுவம் நிறுவப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு, கடைசி பிரிட்டிஷ் Commander in chief ஜெனரல் பிரான்சிஸ், 1949 ஜனவரி 15-ல் தான் இந்திய தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் கரியப்பாவிடம் ராணுவத்தை ஒப்படைத்தார். அதனை நினைவுகூரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15 ராணுவ தினம் கொண்டாடப்படுகிறது. இன்று ராணுவத்தின் வீரம், தியாகம் போன்றவற்றை நாமும் ஒரு கணம் நினைவுகூர்வோம்.


