News August 27, 2025

அரசியலுக்கு வந்த ஒரே ஆண்டில் பிரதமர் பதவி!

image

ஐரோப்பிய நாடான லிதுவேனியாவின் புதிய பிரதமராக இங்கா ருகினீனே(44) தேர்வாகியுள்ளது அரசியலில் விநோதமாக பார்க்கப்படுகிறது. கடந்தாண்டு பொதுத்தேர்தலுக்கு முன்புதான் அவர், சமூக ஜனநாயக கட்சியில் சேர்ந்தார். பின்னர், MP-யாகி 2024 டிசம்பர் முதல் அந்நாட்டின் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவருக்கு பிரதமர் பதவி தேடி வந்துள்ளது. இவர், அந்நாட்டின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

Similar News

News March 9, 2026

BREAKING: செங்கல்பட்டில் இரட்டை படுகொலை

image

பல்லாவரம் அருகே திரிசூலம் பகுதியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான ஆறுமுகம் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரை இன்று அதிகாலை அடையாளம் தெரியாத கும்பல் வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியது. சம்பவ இடத்திற்கு வந்த பல்லாவரம் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரட்டை கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News March 9, 2026

கண்ணீரை மறைத்து விளையாடிய இஷான்

image

தனிப்பட்ட துயரத்தை மீறி நாட்டுக்காக விளையாடிய இஷானின் மனவலிமை மற்றும் அர்ப்பணிப்பு ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. பைனலுக்கு முந்தைய நாள் நடந்த கார் விபத்தில், இஷானின் சகோதரி(cousin) & அவரது கணவர் உயிரிழந்தனர். இந்த பெரும் துயரத்திலும், தனது கண்ணீரை மறைத்து அணிக்காக களமிறங்கிய இஷான், சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு பங்களித்தார். மேலும், இந்த வெற்றியை தனது மறைந்த சகோதரிக்கு அர்ப்பணித்தார்.

News March 9, 2026

அஜித்குமார் மரண வழக்கு: அதிர்ச்சியூட்டும் தகவல்

image

சிவகங்கை, காவலாளி அஜித்குமார் மரணத்திற்கு காரணமான நகை திருட்டு புகாரில் சம்பந்தப்பட்ட நகைகளை கண்டுபிடிக்க முடியவில்லை என மதுரை கோர்ட்டில் CBI தெரிவித்துள்ளது. அதனை ஏற்று வழக்கை முடித்து வைக்க நிகிதா சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த நகை திருட்டு வழக்கின் விசாரணைக்கு தனிப்​படை காவலர்​களால் அழைத்துச் செல்​லப்​பட்டு தாக்கப்பட்​ட​தில் கடந்த ஜூன் மாதம் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!