News April 8, 2024
கோர விபத்தில் 94 பேர் பலி

ஆப்பிரிக்காவின் மொசாம்பிக் நாட்டில் படகு கவிழ்ந்து 94 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டில் பரவிவரும் காலரா நோய்க்கு பயந்து மக்கள் அங்கும் இங்கும் இடம் மாறி வருகின்றனர். அதற்காக லைசன்ஸ் இல்லாத படகு ஒன்று 130 பயணிகளுடன் புறப்பட்டது. நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில் 94 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் 26 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
Similar News
News July 7, 2025
அதிமுக கூட்டணியில் ஐஜேகே.. அதிகாரப்பூர்வ முடிவு

இந்திய ஜனநாயக கட்சி அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக உடன் இணைந்து பெரம்பலூரில் போட்டியிட்ட அக்கட்சி, NDAவில் அதிமுக இணைந்த பிறகு தங்களது நிலைப்பாட்டை அறிவிக்காமல் மவுனம் காத்து வந்தது. இந்நிலையில், கோவையில் இபிஎஸ் நடத்தும் ரோடு ஷோவில் IJK-வினர் பங்கேற்பார்கள் என அதிகாரப்பூர்வமாக பாரிவேந்தர் அறிவித்துள்ளார். இது கூட்டணிக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
News July 7, 2025
சீரியலுக்கு யுடர்ன் போட்ட Ex மத்திய அமைச்சர்

2014 தேர்தலில் ராகுல் காந்திக்கு எதிராக அமேதி தொகுதியில் போட்டியிட்டு தோற்றாலும் ஸ்மிருதி இரானிக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்து பாஜக அழகு பார்த்தது. தொடர்ந்து 2019-ல் ராகுலுக்கு அதிர்ச்சி தோல்வி கொடுத்த அவர் 2024 தேர்தல் தோல்விக்கு பின் அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். இதனால் ஸ்மிருதி மீண்டும் டிவி சீரியலுக்கே சென்றுவிட்டார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வந்துவிட்டது.
News July 7, 2025
பிரசவ வலி.. இக்கட்டான சூழல்! சாதுரியமாக செயல்பட்ட பெண்!

பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு சாதுரியமாக ரயில் நிலையத்தில் பிரசவம் பார்த்த ராணுவ டாக்டருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. சிகிச்சைக்கு கருவிகள் இல்லாத போதிலும், தொப்புள் கொடியை இறுக்க ஹேர் கிளிப்பையும், வெட்டுவதற்கு கத்தியையும் பயன்படுத்தி பிளாட்பாரத்திலேயே பார்த்துள்ளார் ராணுவ டாக்டர். அவரின் சாதுரியத்தை பலரும் பாராட்டுகின்றனர்.