News August 23, 2025
Beauty Tips: இளநரை பிரச்னையா? இதோ தீர்வு!

இளநரை பிரச்னை ஆண்கள், பெண்கள் இருவரையும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குகிறது. இதை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் இந்த வழிகள் உதவும்: *அதிகம் Stress ஆகாதீர். *வைட்டமின் B நிறைந்த உணவுகளை தினசரி உட்கொள்ளவும். *கரிசலாங்கண்ணி சாற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து தேய்த்துவரலாம். *சல்பேட் இல்லாத ஷாம்புகள், அமோனியா, பிபிடி கலக்காத ஹேர்-டை போன்றவற்றை பயன்படுத்தலாம் *வாரம் 3 முறை தலைக்கு குளிக்கவும். SHARE IT!
Similar News
News August 24, 2025
ஆகஸ்ட் 24: வரலாற்றில் இன்று

*2006 – புளூட்டோ ஒரு கோள் அல்ல, அது குறுங்கோள் என அறிவிக்கப்பட்டது.
*1891 – தாமஸ் ஆல்வா எடிசன் ஃபிலிம் கேமராக்களுக்கான காப்புரிமைப் பெற்றார்.
*1991 – உக்ரைன் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விலகி தனி நாடானது.
*1995 – வின்டோஸ் 95 வெளியிடப்பட்டது.
*1947 – பிரேசில் எழுத்தாளர் பவுலோ கோய்லோ பிறந்ததினம்.
News August 24, 2025
குண்டாக உள்ளவர்களே இங்கு ஹீரோ..!

ஸ்லிம்மாக இருப்பதை ஃபிட் என நினைக்கிறோம். ஆனால் எத்தியோப்பியாவில் உள்ள போடி பழங்குடியினர் குண்டாக இருப்பதை பெருமையாக கருதுகின்றனர். இதற்காக போட்டியும் நடத்துகின்றனர். இதில் பங்கேற்கும் இளைஞர்கள் 6 மாதங்கள் வேலைக்கு செல்லாமல் சாப்பிட்டுவிட்டு வீட்டிலேயே இருப்பார்களாம். போட்டியின் அன்று யார் அதிக எடை கூடியிருக்கிறார்களோ அவரே ஹீரோ. அங்குள்ள பெண்களும் குண்டான இளைஞர்களையே விரும்புகிறார்களாம்.
News August 24, 2025
நெல்லை கூட்டத்தால் அமித்ஷா அப்செட் என தகவல்

அண்மையில் நெல்லையில் நடந்த பாஜக பூத் முகவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்த அமித்ஷா கூட்டத்தை பார்த்ததும் அப்செட் ஆனதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 1.5 லட்சம் தொண்டர்கள் வருவார்கள் என அவரிடம் கூறப்பட்டதாம். ஆனால் அதில் பாதி பேர் கூட வராததால் பல இருக்கைகள் காலியாக இருப்பதை கண்டு அதிர்ந்ததோடு, மாநாட்டில் பேசும்போது மொத்தக் கூட்டமும் கலைந்ததை கண்டு அவரே அப்செட் ஆனதாக கூறப்படுகிறது.