News August 23, 2025
வழக்கு சாட்சி: குழந்தைகளை பாதுகாக்க அரசு புதிய முடிவு!

வழக்குகளில் சாட்சியாக உள்ள குழந்தைகளை உளவியல் ரீதியாக பாதுகாப்பது தொடர்பாக குழு அமைக்க TN அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான விதிமுறைகளை வகுக்க பல துறைகள் அடங்கிய குழு ஒன்றை விரைவில் அமைக்க உள்ளதாம். கோவையில் 8 வயது மகளின் கண்முன்னே அவரது தாய் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கொலையை நேரில் பார்த்த குழந்தை உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.
Similar News
News March 14, 2026
பாய்ந்த குண்டாஸ்: திருவாரூர் மாவட்ட எஸ்.பி அதிரடி!

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுதலில் ஈடுபட்ட பாலசுந்தரம், ராஜேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் பரிந்துரையின் பேரில், இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
News March 14, 2026
சர்வதேச சந்தையில் தங்கம் விலை தலைகீழாக குறைந்தது

சர்வதேச சந்தையில் இந்த வாரத்தில் பெரும் ஏற்றத்துடன் தொடங்கிய தங்கம் விலை, வார இறுதியான இன்று தலைகீழாக குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் தங்கம் $98(இந்திய மதிப்பில் ₹8,982) சரிந்து $5,020-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி 1 அவுன்ஸ் $5 குறைந்து $80 ஆக உள்ளது. இந்த வாரத்தில் மட்டும் 1 அவுன்ஸ் தங்கம் சுமார் $250(இந்திய மதிப்பில் ₹23,151) குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது.
News March 14, 2026
CM ஸ்டாலின் ₹2,000 கொடுப்பார்: அப்பாவு

வரும் தேர்தலில் திமுக குறைந்தபட்சம் 53% வாக்குகளுடன் வெற்றி பெறும் என அப்பாவு நம்பிக்கை தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் பேசிய அவர், TN மக்கள் எப்போது தேர்தல் வரும், எப்போது CM ஸ்டாலினுக்கு நன்றிக்கடனாக வாக்களிக்கலாம் என காத்திருக்கிறார்கள் என்றார். மீண்டும் CM ஆக ஸ்டாலின் ஆட்சியில் அமர்வார் என்றும், அப்போது உரிமை தொகையாக ₹1,000 கொடுக்க மாட்டார், ₹2,000 கொடுப்பார் எனவும் கூறினார்.


