News August 23, 2025
Hero அவதாரம் எடுத்த இயக்குநர் அபிஷன்..Back Story இதான்!

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்தை கமிட் செய்ய பல தயாரிப்பாளர்கள் வலை
வீசிக்கொண்டிருந்த நிலையில், அவரை
லாவகமாகத் தூக்கிய சௌந்தர்யா ரஜினி, அபிஷன் சொன்ன கதையைக் கேட்டவுடன் ‘இந்தக் கதைக்கு நீங்கதான் ஹீரோ என்றாராம். மேலும், யார்கிட்டயும் கதையை சொல்லவேண்டாம்’ என்று ஷாக் கொடுத்திருக்கிறார். இதனையடுத்து சீக்ரெட்டாக பூஜை போடப்பட்டு படப்பிடிப்பும் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
Similar News
News March 31, 2026
திமுக மா.செ.,க்களுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

சட்டமன்ற தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, கூட்டணி கட்சிகள் வெற்றி பெறாவிட்டால் பதவி பறிக்கப்படும் என திமுக மா.செ.,க்களை எச்சரித்ததாக அவர் தெரிவித்தார். தேர்தல் பிரசாரத்தில் அவர்கள் சிறிதளவு மெத்தனப்போக்கு காட்டினாலும் தலைமையிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்ட அவர், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். <<-se>>#TNElection2026<<>>
News March 31, 2026
BJP வேட்பாளர் பட்டியல் ரெடி.. அண்ணாமலை போட்டியா?

சட்டப்பேரவை தேர்தலில், பாஜக சார்பாக போட்டியிடும் 27 வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியாகிறது. இதற்காக காலை 10 மணி அளவில் சென்னை வரும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மாநில பாஜக தலைவர்களுடன் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வேட்பாளர்களை அறிவிக்க உள்ளார். இதனிடையே, கோவை வடக்கு தொகுதியின் வேட்பாளராக அண்ணாமலை அறிவிக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. <<-se>>#TNElection2026<<>>
News March 31, 2026
பெட்ரோல், டீசல் விலை.. அதிர்ச்சித் தகவல்

பிரென்ட் கச்சா எண்ணெய் விலை தற்போது ஒரு பேரல் 116 டாலராக உள்ளது. ஈரான் மீது தரைவழி ஊடுருவல் நடத்த அமெரிக்கா படைகளை குவித்து வருவதால், கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. மற்ற நாடுகளில் 60% வரை பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் கண்ட நிலையில், இந்தியாவில் கலால் வரி ₹10 குறைக்கப்பட்டதால் விலை உயரவில்லை. ஆனால், வரும் நாட்களில் இந்தியாவிலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.


