News April 8, 2024

IPL: டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு பின்னடைவு

image

டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ், அடுத்த சில போட்டிகளில் பங்கேற்கமாட்டார் என அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டது. அதனால், மும்பைக்கு எதிரான நேற்றைய போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. காயம் குறித்து ஸ்கேன் செய்ய வேண்டும் என்பதால், அடுத்த ஒரு வாரத்திற்கு போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 10, 2026

சிலிண்டர் தட்டுப்பாடு… உடனே இதை செய்யுங்க

image

சமையல் சிலிண்டர் தட்டுப்பாடு பெரியளவில் உள்ள நிலையில், இந்த டிப்ஸை பயன்படுத்தினால் சிலிண்டரை பெரியளவில் மிச்சம் பண்ணலாம். ➤ பிரஷர் குக்கரில் சமைத்தால் எரிபொருள் 20% மிச்சமாகும் ➤சமையல் ஒரு கொதி நிலையை அடைந்த பின் மிதமான தீயில் சமைக்கலாம் ➤ஊற வைத்து சமைப்பது நல்லது ➤அகலமான பாத்திரத்தை பயன்படுத்தலாம் ➤குறைந்த தண்ணீரை பயன்படுத்தி சமைத்தால் நீர் ஆவியாகும் நேரம் குறையும். SHARE IT

News March 10, 2026

CINEMA 360: ஒரே வீச்சில் ‘சேயோன்’

image

*‘சேயோன்’ படத்தின் ஷூட்டிங் வரும் ஏப்ரலில் தொடங்கி ஒரே கட்டமாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாம் *ரஜினி எழுதி வரும் அவரின் சுயசரிதை புத்தகம் இந்த ஆண்டிற்குள் வெளியாகுமாம் *‘லப்பர் பந்து’ இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கும் படத்தில், தனுஷுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்க உள்ளார் என டாக் *‘உறியடி’ விஜயகுமார் நடிக்கும் ‘அறிவு’ படத்தில் பிக்பாஸ் சுபிக்‌ஷா முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

News March 10, 2026

உக்ரைனிடம் உதவி கேட்ட அமெரிக்கா

image

கடந்தாண்டு ஏவுகணைகள் கேட்ட ஜெலன்ஸ்கியை டிரம்ப் வெளிப்படையாக விமர்சித்து உதாசீனப்படுத்தினார். ஆனால் தற்போது, ஈரானின் Shahed ட்ரோன்களை சமாளிக்க முடியாமல் உக்ரைனின் உதவியை நாடியுள்ளார். மில்லியன் கணக்கில் செலவழித்து ஓய்ந்துபோன அமெரிக்கா, தற்போது ட்ரோன்களை எதிர்கொள்ளும் அனுபவம் கொண்ட உக்ரைனிடம் சென்றுள்ளது. ஒரு வருடத்திற்கு முன் உதவி கேட்ட நாடு, இன்று உதவி வழங்கும் நிலையில் உள்ளது.

error: Content is protected !!