News August 18, 2025
அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கு இன்று விசாரணை

தமிழக அமைச்சர் ஐ. பெரியசாமி கடந்த 2006-11 திமுக ஆட்சி காலத்தில் 2006-2010 வரையிலான காலகட்டத்தில் வருவாய், சட்டம், சிறை மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக ரூ. 2 கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் அளவுக்கு சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக அவர், அவரது மனைவி, மகன் ஆகியோர் மீது போடப்பட்ட வழக்கு விசாரணை இன்று(ஆக.18) உச்ச நிதிமன்றத்தில் நடைபெறுகிறது.
Similar News
News August 20, 2025
திண்டுக்கல்: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

திண்டுக்கல்: வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம்.(SHARE IT)
News August 20, 2025
BREAKING: திண்டுக்கல்லில் கழுத்தறுத்து கொலை!

திண்டுக்கல்: பழனி பெரியப்பாநகர் நகராட்சி குப்பை கிடங்கு அருகே ஓர் இளைஞர் இன்று(ஆக.20) கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட நபர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? யார் கொலை செய்தது? உள்ளிட்ட கோணங்களில் பழனி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
News August 20, 2025
திண்டுக்கல்: சக்கரை நோயா..? முக்கிய அறிவிப்பு!

திண்டுக்கல் மக்களே…, நிங்களோ அல்லது உங்கள் நண்பரோ சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவரா? அதீத சர்க்கரை அளவால் கால்களில் காயம், பாதிப்பு உள்ளதா? கவலை வேண்டாம், தமிழக அரசின் ‘பாதம் காக்கும் திட்டம்’ உள்ளது. இதன் மூலம் உங்களுக்கு இலவச பரிசோதனை, அறுவை சிகிச்சை போன்றவை வழங்கப்படுகின்றன. இதற்கு மாவட்ட அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகலாம். உடனே பாதிக்கப்பட்ட நண்பர்களுக்கு SHARE