News April 7, 2024
24 மணிநேரமும் இதற்காக உழைத்து வருகிறேன்

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் வளர்ந்த பாரதம் என்ற கனவிற்காக செலவிடுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் பிரசாரம் செய்த அவர், 2047 என்ற இலக்கிற்காக 24/7 உழைத்து வருவதாக கூறினார். மத்திய அரசு வலுவாக இருந்தால்தான் உலக நாடுகளுக்கு நம் மீது நம்பிக்கை வரும். மேலும், திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் இம்மாநிலத்தில் மகளிருக்கு நிகழும் அநீதிகளை நாடு பார்த்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
Similar News
News November 11, 2025
ஓய்வு முடிவை அறிவித்தார் ரொனால்டோ

கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்னும் 1 அல்லது 2 ஆண்டுகளில் ஓய்வு பெறுவேன் என்று தெரிவித்துள்ளார். 2026 உலகக் கோப்பையில் விளையாட திட்டமிட்டுள்ள அவர், அப்போது தனக்கு 41 வயதாகி இருக்கும் என்றும், ஓய்வு பெறுவதற்கு அதுவே சரியான தருணம் எனவும் பேசியுள்ளார். அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைக்கு போர்ச்சுகல் அணி இதுவரை தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
News November 11, 2025
BREAKING: 2026-ல் 24 நாள்கள் விடுமுறை.. அரசு அறிவிப்பு

2026-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் அட்டவணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்தாண்டில் 24 நாள்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு, பொங்கல், குடியரசு தினம், தைப்பூசம், மகாவீரர் ஜெயந்தி, ரம்ஜான், புனித வெள்ளி, சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட 24 நாள்கள் விடுமுறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 11, 2025
எல்லாருக்கும் ஐடியா கொடுத்தாரு… ஆனா அவருக்கு?

பிஹார் தேர்தல் கருத்துக் கணிப்புகளில் தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி 0-7 இடங்கள் வெல்லும் என்றும், 9 – 13% வாக்குகள் பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, பெரிய கட்சிகளுக்கு எல்லாம் வியூகம் வகுத்துக் கொடுத்து வெற்றிபெற வைத்த பிரசாந்த் கிஷோரால், தன் கட்சிக்கு வெற்றியை தரமுடியவில்லை எனப் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். இதுபற்றி உங்களின் கருத்து?


