News April 6, 2024
பி.ஏ.பி., கால்வாயில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூர் பி.ஏ.பி., பாசன கால்வாயில் குளித்த சிறுமிகள் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று கால்வாயில் குளிக்கச் சென்ற திருப்பூரை சேர்ந்த சந்தோஷ், வீணா, ப்ரீத்தா ஆகியோர் வீடு திரும்பவில்லை. இன்று தேவனாம்பாளையம் அருகே 3 பேரின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளன. 3 பேரின் உடல்களை மீட்ட போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 7, 2026
முட்டை விலை குறைந்தது

டிசம்பரில் வரலாறு காணாத உச்சத்தை எட்டிய முட்டை கொள்முதல் விலை, ஜனவரியில் படிப்படியாக சரியத் தொடங்கியுள்ளது. கடந்த 3 நாள்களில் 40 காசுகள் குறைந்த நிலையில், இன்று மேலும் 20 காசுகள் சரிந்துள்ளது. நாமக்கல்லில் தற்போது 1 முட்டையின் கொள்முதல் விலை ₹5.80-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சில்லறை விலையில் 1 முட்டை ₹8 வரை விற்கப்பட்டு வரும் நிலையில், இனி விலை குறைய வாய்ப்புள்ளது.
News January 7, 2026
மகளிர் உரிமைத்தொகை 1000.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள், மேல்முறையீடு செய்யலாம் என அமைச்சர் சக்கரபாணி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். முதலில் அருகில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றால், மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட காரணத்தை சொல்வார்கள். ஒருவேளை அவர்கள் சொல்லும் காரணம் தவறானது என்றால், அங்கேயே மகளிர் உரிமைத்தொகை ₹1000 பெற மேல்முறையீடு செய்யலாம் என்று கூறியுள்ளார்.
News January 7, 2026
பள்ளி தனித்தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு

10th, +1 (Arrear), +2 பொதுத்தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், விண்ணப்பிக்க தவறியவர்கள், ஜன.9 & 10-ல் 10 AM – 5 PM வரை அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையத்தில் தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ₹500 (10th), ₹1,000 செலுத்தி (HSC) நேரடியாக விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <


