News August 7, 2025
ரஷ்ய எண்ணெய் வாங்குவதை கைவிட்ட இந்திய நிறுவனங்கள்

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை அரசின் எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தவில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில், டிரம்ப் முதலில் 25% வரிவிதிப்பு அறிவித்தபோதே இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்கள் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டதாக பிரபல புளூம்பெர்க் ஊடகம் தெரிவித்துள்ளது. ஆனால், இதுகுறித்து அந்த நிறுவனங்கள் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
Similar News
News August 12, 2025
GSTயை உயர்த்த வங்கிகள் பரிந்துரை.. பாதிப்பு யாருக்கு?

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை வணிகர்கள் கைவிடுவதை தடுக்கும் வகையில் அவர்களுக்கான GST உச்சவரம்பை ₹1 கோடி வரை உயர்த்த வங்கிகள் பரிந்துரைத்துள்ளன. வணிகர்களுக்கான GST உச்சவரம்பு ₹40 லட்சமாக உள்ளது. அதை உயர்த்துவது குறித்து NPCI, RBI-யிடம் நிதிச் சேவைகள் துறை கருத்து கேட்டுள்ளது. கர்நாடக வணிக வரித்துறை UPI மூலம் அதிக வருவாய் ஈட்டிய வணிகர்களுக்கு GST நோட்டீஸ் அனுப்பியது சர்ச்சையானதால் ஆலோசனை.
News August 12, 2025
குடியுரிமைக்கான சான்றிதழாக ஆதாரை கருத முடியாது..!

ஆதார் அட்டை ஒரு முக்கியமான அடையாள ஆவணமாக இருந்தாலும், அதை குடியுரிமைக்கான சான்றாக கருத முடியாது என SC தெரிவித்துள்ளது. பீகாரில் SIR சர்ச்சை தொடர்பான மனுவை விசாரித்தபோது ஆதார் குறித்த EC-ன் கருத்தை SC உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், ஆதார் அட்டையை உரிய சான்றாக அங்கீகரிப்பதற்கு முன் அதை சரிபார்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. உங்கள் ஆதார் ஆவணங்கள் அப்டேட்டில் உள்ளதா?
News August 12, 2025
ரஷ்யாவுக்கு அலாஸ்காவை தாரைவார்த்த டிரம்ப்?

அமெரிக்காவில் உள்ள ஒரு மாகாணம் தான் அலாஸ்கா. ஆனால், பிரஸ்மீட்டில் டிரம்ப் செய்த ஒரு தவறால் அலாஸ்கா ரஷ்யாவுக்கு கொடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆக.15-ல் அலாஸ்காவில் டிரம்ப்-புடின் சந்திப்பு நடக்கவுள்ளது. இதுபற்றி டிரம்ப் வெள்ளை மாளிகையில் பேட்டியளித்தபோது, புடினை அலாஸ்காவில் சந்திக்கவுள்ளேன் என கூறுவதற்கு பதில் ரஷ்யாவில் சந்திக்கவுள்ளேன் என கூறியிருக்கிறார்.