News August 7, 2025
இதய நோய்களை தடுக்க… இதை செய்யுங்கள்

*முழு தானியங்கள், நட்ஸ், காய்கறிகள், பச்சை காய்கறிகள், பீன்ஸ், மீன், ஆலிவ் எண்ணெய், சீசனுக்குரிய பழங்கள் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளவும் *ஆட்டிறைச்சி, சர்க்கரை, உப்பு, எண்ணெய் & நெய் இவற்றை குறைத்துக் கொள்ளவும். *காய்கறிகள், பழங்களை 5 வேளை பிரித்து உண்ணலாம். *தினசரி குறைந்தது 6 டம்ளர் தண்ணீர் அருந்துங்கள் *தினசரி குறைந்தது 20 நிமிடங்களாவது உடலுழைப்பு (அ) உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்
Similar News
News August 10, 2025
பிஹாரில் புதுவித மோசடி.. தேஜஸ்வி

தேர்தல் ஆணையம் வெளியிட்ட பட்டியலில் 3 லட்சம் வாக்காளர்களின் வீட்டு எண் ‘0’ என குறிப்பிடப்பட்டுள்ளதாக தேஜஸ்வி குற்றம் சாட்டியுள்ளார். EC-யின் வேலை இங்கு பிஹாரில் பலிக்காது எனக் கூறிய அவர், தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியல் கேலிக்கூத்தாக இல்லையா என கேள்வி எழுப்பினார். மேலும், எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினால், புகார் தந்தால், ஆலோசனை கூறினால் EC கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.
News August 10, 2025
இந்த ஆண்டே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் Ro- Ko?

2027 ODI WC-ல் Ro-Ko கவனம் செலுத்தி வருகின்றனர். ஆனால், BCCI அத்தொடருக்கு இளம் வீரர்கள் கொண்ட அணியை தயார் செய்யும் திட்டத்தில் உள்ளது. இதனால், அக்டோபரில் தொடங்கும் ஆஸி., தொடருடன் Ro-Ko ஓய்வு பெறுவார்கள் என தகவல் வெளிவந்துள்ளது. இருவருக்கும் ஆஸி., மண்ணில் இதுவே கடைசி தொடராக இருக்கலாம் என்பதால், ஆஸி., கிரிக்கெட் நிர்வாகம் Special Send-off நிகழ்ச்சிக்கும் ஏற்பாடுகளை செய்து வருகிறது.
News August 10, 2025
MGR குறித்து சர்ச்சை பேச்சு.. திருமா விளக்கம்

MGR, ஜெ., குறித்து திருமா பேசியது சர்ச்சையான நிலையில், EPS, OPS உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், MGR, ஜெ.,வை அவமதிக்கவில்லை; ஒரு ஒப்பீட்டுக்காக பேசிய தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக திருமா தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். மேலும், அவர்களை விமர்சிக்கும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய ஆளும் இல்லை எனக் கூறிய அவர், தன் பேச்சின் முக்கிய நோக்கம் குறித்து தெளிவுப்படுத்தினார்.