News August 7, 2025

பந்து சேதம்? இந்திய வீரர்கள் மீது Ex பாக்., பவுலர் புகார்

image

IND VS ENG இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா அபாரமாக பந்துவீசி வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்திய வீரர்கள் பந்தின் பளபளப்புக்காக வாஸ்லின் தடவி இருக்கலாம் என Ex பாக்., பவுலர் ஷபீர் அகமது குற்றஞ்சாட்டியுள்ளார். 80 ஓவர்கள் முடிந்த பின்பும் பந்து பளபளப்பாக இருந்ததாக கூறிய அவர், அந்த பந்துகளை ஐசிசி பரிசோதிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Similar News

News August 10, 2025

அபராத வட்டியை தள்ளுபடி செய்தது TNHB.. செக் பண்ணுங்க!

image

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் 31.3.2025-க்கு முன்பு தவணை காலம் முடிவுற்ற வீடுகளுக்கு சலுகைகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, *மாதத் தவணை தொகையை தாமதமாக செலுத்தியதற்காக விதிக்கப்படும் அபராத வட்டி. *வட்டி முதலாக்கத்தின் மீது விதிக்கப்படும் வட்டி. *நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்திற்கான வட்டியில் ஒவ்வொரு ஆண்டிற்கும் 5 மாதத்திற்கான வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்படுகிறது. <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க.

News August 10, 2025

நடிகர் விஜய்யின் சொத்து எவ்வளவு தெரியுமா?

image

நடிகரும், TVK தலைவருமான விஜய்யின் சொத்து மதிப்பு சுமார் ₹600 கோடி என TOI தெரிவித்துள்ளது. நீலாங்கரை சொகுசு பங்களா, 10 நிறுவனங்களின் விளம்பர தூதர், ரோல்ஸ் ராய்ஸ், BMW X5 & X6, Audi A8 L, Mercedes Benz GLA உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட சொகுசு கார்களும் இதில் அடங்கும். குறிப்பாக ஆண்டுக்கு சராசரியாக ₹100 முதல் ₹120 கோடி வரை அவர் சினிமா மூலம் வருமானம் ஈட்டுவதாகவும் TOI செய்தி கூறுகிறது. அடேங்கப்பா..!

News August 10, 2025

Way2News விநாடி வினா கேள்வி பதில்கள்..

image

காலை 11:30 மணிக்கு கேட்கப்பட்ட <<17359267>>கேள்விகளுக்கான <<>>பதில்கள்:
1. 1975
2. தாவரங்களின் இலைகள், தண்டுகள் & பாசிகளில் காணப்படுகிறது
3. கலீலியோ கலிலி (சில இடங்களில் ஐசக் நியூட்டனும் குறிப்பிடப்படுகிறார்)
4. செங்காந்தள்
5. மைத்துனர்.

error: Content is protected !!