News August 7, 2025
அரசு பொது விடுமுறை: ஆக.15-ல் கிராம சபைக் கூட்டம்

அனைத்து ஊராட்சிகளிலும் வரும் 15-ம் தேதி சுதந்திர தின விடுமுறை தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடத்த கலெக்டர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார். இதில், தூய்மையான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அந்தந்த பகுதியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்று உங்கள் ஊர் பிரச்னைகள், வரவு செலவு கணக்குகளை தெரிந்து கொள்ளுங்கள் மக்களே..!
Similar News
News August 10, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: அறிவுடைமை ▶குறள் எண்: 423 ▶குறள்: எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. ▶பொருள்: எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.
News August 10, 2025
₹5 லட்சத்திற்கு ஏலம் போன கில்லின் ஜெர்ஸி

இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் முடிந்ததும், இரு அணி வீரர்கள் அணிந்த ஜெர்ஸி, தொப்பிகள் ஆன்லைனில் ஏலம் விடப்பட்டன. இதில் இந்திய அணியின் கேட்பன் சுப்மன் கில்லின் ஜெர்ஸி அதிகபட்சமாக ₹5.6 லட்சத்திற்கு ஏலம் போயுள்ளது. மொத்தமாக இந்திய அணியின் ஜெர்ஸிகள் ₹33.9 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டன. இந்த பணம் ரூத் ஸ்ட்ராஸ் அறக்கட்டளை மூலம் பொது சேவைக்கு வழங்கப்பட உள்ளன.
News August 10, 2025
இந்தியாவிற்கு வான்வெளியை மூடியதால் ₹127 கோடி இழப்பு

இந்திய விமானங்களுக்கு வான்வெளியை மூடியதால் பாகிஸ்தானுக்கு ₹127 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 24 முதல் ஜூன் 30 வரை இடைப்பட்ட காலங்களில் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியதால், பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடியது. தற்போது வரை அது நடைமுறையில் உள்ளது. இந்தியாவும் பாகிஸ்தான் விமானங்களுக்கு வான்வெளியை மூடியுள்ளது.