News August 6, 2025

2035-ல் நிலவிற்கு செல்லும் பாகிஸ்தான்!

image

சீன ஆதரவுடன் 2035-ல் நிலவில் தரையிறங்க பாக்., தயாராகி வருகிறது. அதேபோல், 2026-ல் சீன விண்வெளி மையத்திற்கு தங்களது விண்வெளி வீரரை அனுப்பவும் திட்டமிட்டுள்ளது. இதற்காக பாக்., அமைச்சர் அஷான் இக்பால், சீனாவில் ஆராய்ச்சியாளர்களுடன் பேசிவருகிறார். ஆனால், பாகிஸ்தானின் விண்வெளி ஆராய்ச்சி மையமான SUPARCO இதுவரை ஒரு செயற்கைக்கோளை கூட பிற நாடுகளின் பங்களிப்பு இல்லாமல் விண்ணில் ஏவியது இல்லை.

Similar News

News August 6, 2025

டெஸ்ட் ரேங்கிங்கில் சிராஜ் முன்னேற்றம்

image

டெஸ்ட் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதில் சிறந்த பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் சிராஜ் 15-ம் இடத்தை பிடித்துள்ளார். இதற்கு முன்பு அவர் 27-வது இடத்தில் இருந்த நிலையில், தற்போது 12 இடங்கள் முன்னேறியுள்ளார். பும்ரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். பேட்டர்களுக்கான பட்டியலில் ஜெய்ஸ்வால் 5ம் இடத்திலும், பண்ட் 8 இடத்திலும் உள்ளனர். ஜோ ரூட் முதலிடத்தில் உள்ளார்.

News August 6, 2025

EPS-க்கு உடல்நலக்குறைவு.. நாளைய கூட்டங்கள் ரத்து!

image

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நாளைய பரப்புரைக் கூட்டங்களை EPS ரத்து செய்துள்ளார். தென் மாவட்டங்களில் தீவிர பரப்புரை மேற்கொண்டு அவருக்கு தொண்டை வலி, உடல் சோர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், உடல்நலன் கருதி ராஜபாளையத்தில் நாளை திட்டமிட்டிருந்த கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News August 6, 2025

மோடியின் சீனப் பயணம்… அமெரிக்காவுக்கு செக்!

image

கால்வான் மோதல், பஹல்காம் தாக்குதலின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவு போன்ற காரணங்களால் சீனாவை இந்தியா தள்ளியே வைத்திருந்தது. இந்நிலையில், மோடியின் <<17321874>>சீனப் பயணம்<<>> ராஜதந்திர நகர்வாக பார்க்கப்படுகிறது. டிரம்பின் இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டால், பாதிப்பை சமாளிக்க நமக்கு புதிய பொருளாதார உறவுகள் தேவை. மேலும், அமெரிக்காவின் மேலாதிக்கத்தை எதிர்கொள்ள ரஷ்ய, சீன நாடுகளுடன் இணைந்து செயல்பட இந்தியா திட்டமிடுகிறது.

error: Content is protected !!