News August 5, 2025
இரு அவைகளுக்கு 2 மணிவரை ஒத்திவைப்பு

ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் முழக்கமிடும்போது அவையின் மையத்திற்கு CISF படையினர் வந்ததற்கு எதிர்கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். இதனால் ஆளும் தரப்புக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அவை 2மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் பிஹார் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் லோக்சபாவும் ஒத்தி வைக்கப்பட்டது.
Similar News
News August 6, 2025
‘மாபெரும் தமிழ்க் கனவு’ மீண்டும் தொடக்கம்

கல்லூரி மாணவர்களிடையே தமிழர் மரபை பரப்பும் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சிகள் ஓராண்டு இடைவெளிக்கு பின் இன்று மீண்டும் தொடங்குகிறது. கோவை, திருப்பூர், சென்னை, செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருவாரூர், ஈரோடு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்றும், நாளையும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 50-க்கும் மேற்பட்ட பல்துறை ஆளுமைகள், 200 கல்லூரிகள், 2 லட்சம் மாணவர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.
News August 6, 2025
9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் IMD ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. அதேபோல் தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30-40 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
News August 6, 2025
மீண்டும் CAB தலைவராகும் கங்குலி?

முன்னாள் BCCI தலைவர் சவுரவ் கங்குலி, மீண்டும் வங்காள கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக (CAB) உள்ளார். வரும் செப்டம்பர் 20ம் தேதி நடைபெற உள்ள CAB ஆண்டு பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு முன்னதாக, தலைவர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்றே கூறப்படுகிறது. கங்குலியின் சகோதரர் ஸ்நேகாஷிஷ் தான் தற்போது CAB தலைவராக இருக்கிறார்.