News August 5, 2025
தங்கம் விலை ₹600 உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ₹75 ஆயிரத்தை நெருங்கியதால், நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹600 உயர்ந்து, ₹74,960ஆகவும், கிராமுக்கு ₹75 உயர்ந்து ₹9,370ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 1-ம் தேதி ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹73,200ஆக விற்பனையான நிலையில், 4 நாளில் ₹1,760 அதிகரித்துள்ளது.
Similar News
News August 5, 2025
டிகிரி தேவையில்ல, திறமை இருந்தா போதும்!

கல்லூரி டிகிரி முக்கியமல்ல, திறமையும் செயல்திறனும் தான் முக்கியம். நாங்கள் பணியாளரிடம் இதையே எதிர்பார்க்கிறோம் என்கிறார் டாப் டெக் நிறுவனமான Palantir-ன் சிஇஓ அலெக்ஸ் கார்ப். எலான் மஸ்கும் இதையே கூறியிருந்தார். இதன் பொருள் முறையான படிப்பு தேவையில்லை என்பதல்ல; என்ன டிகிரி வாங்கியிருந்தாலும், திறமையும் துறை சார்ந்த அறிவும் இருந்தால் தான் வளர முடியும். நம் பிள்ளைகளும் பெற்றோரும் இதை உணர வேண்டும்.
News August 5, 2025
மக்களை ஏமாற்றும் கட்சி திமுக: இபிஎஸ்

திமுகவை போல் மக்களை ஏமாற்றும் கட்சி அல்ல அதிமுக என EPS தெரிவித்துள்ளார். தென்காசியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளுக்கு பின்பு தான் மக்கள் மீது திமுகவுக்கு அக்கறை வந்துள்ளதாக தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தியது தான் திமுக அரசின் சாதனை என்றும், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அம்மா மினி கிளினிக் திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும் எனவும் தெரிவித்தார்.
News August 5, 2025
விதைப்பதை தான் அறுக்க முடியும்: விளாசிய அஷ்வின்

4-வது டெஸ்டில் ரிஷப் பண்ட் காயமடைந்து வெளியேற நேர்ந்தது. அந்த சூழ்நிலையில் சப்ஸ்டிடியூட் களமிறங்க வேண்டுமென காம்பீர் உள்பட பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனால், ‘அது ஒரு ஜோக்’ என பென் ஸ்டோக்ஸ் கிண்டலடித்தார். இந்நிலையில், நேற்று பண்ட்டின் நிலை கிறிஸ் வோக்ஸுக்கு ஏற்பட்டது. இதுபற்றி அஷ்வின், ‘நாம் என்ன விதைக்கிறோமோ அதையே அறுக்க முடியும். ஸ்டோக்ஸ் பேசும்முன் சிந்திக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.