News July 4, 2025
GST வரியை குறைக்க முடிவு.. விலை குறையும் பொருள்கள்!

56-வது GST கவுன்சில் கூட்டத்தில் வரி விதிப்பு முறையில் மாற்றங்கள் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் டூத்பேஸ்ட், சோப்பு, ஐஸ்கீரிம் ஆகியவை 18% லிருந்து 12% பட்டியலுக்கு மாற வாய்ப்புள்ளது. மேலும், நெய், வெண்ணெய், குடை, ஜாம், பழச்சாறு, மருந்துப் பொருள்கள் 5% வரி பட்டியலுக்கு மாற்றப்பட உள்ளதாம். இதனால் நடுத்தர மக்களின் சுமை வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News July 5, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஜூலை 5 – ஆனி – 21 ▶ கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: தசமி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை.
News July 5, 2025
ஆகஸ்ட் 15ல் குட் பேட் அக்லி… எந்த டிவியில் தெரியுமா?

இதுல என்ன சந்தேகம். சன்டிவியில் தானேனு நீங்க கேட்பது புரிகிறது. ஆனால் சன்டிவி ‘GBU’ படத்தை கைமாற்றிவிட்டதாம். சன்டிவியில் நிதி பிரச்னைகள் இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், விரைவில் ‘GBU’ விஜய் டிவியில் டெலிகாஸ்ட் ஆகும் என தகவல்கள் வந்தன. இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த படத்தை வெளியிட விஜய் டிவி முடிவு செய்துள்ளதாம்.
News July 5, 2025
கில் பேட்டிங் மாஸ்டர்கிளாஸ்: கங்குலி

இந்தியா- இங்கி., இடையேயான 2வது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்தார். இது அவரின் முதல் இரட்டை சதமாகும். இந்நிலையில் இந்திய அணியின் ex கேப்டன் கங்குலி, கில்லின் ஆட்டத்தை மாஸ்டர்கிளாஸ் பேட்டிங் எனப் பாராட்டியுள்ளார். இங்கி., மண்ணில் தான் பார்த்ததிலேயே, இதுதான் சிறந்த இன்னிங்ஸ் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.