News July 4, 2025
க்ரைம் மிரட்டல் நாயகன் மைக்கேல் மேட்சன் காலமானார்

‘Kill Bill’, ‘Reservoir Dogs’ உள்ளிட்ட ஏராளமான க்ரைம் த்ரில்லர் படங்களின் மூலம் இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்சன்(67) காலமானார். நேற்று மாரடைப்பு காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது, மேலாளரும் லிஸ் ரோட்ரிக்ஸ் அறிவித்துள்ளார். சமீப காலமாக சினிமா பிரபலங்கள் பலரும் மாரடைப்பு காரணமாக மரணித்து வருகின்றனர். #RIP
Similar News
News December 28, 2025
BREAKING: பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்

பிக்பாஸ் நிகழ்ச்சி 84-வது நாளை எட்டிய நிலையில், கடந்த வாரத்தை போல இம்முறையும் டபுள் எவிக்ஷன் உள்ளதாம். டைட்டில் வின்னராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட கனி வீட்டைவிட்டு வெளியேறுகிறார் என தகவல் கசிந்துள்ளது. இதனால் கனியின் விர்சுவல் ஆர்மி இணையத்தில் பிக்பாஸை திட்டி தீர்த்து வருகின்றனர். அமித் பார்கவ் நேற்று வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. நீங்க யாரு வெளியே போவானு எதிர்பார்த்தீங்க?
News December 28, 2025
இனி கல்யாணத்துக்கும் இன்ஷூரன்ஸ்!

இக்காலத்தில் திருமணத்தை நடத்த லட்சம் முதல் கோடிகள் வரை செலவாகும் நிலையில் ஏன் அதற்கு இன்ஷூரன்ஸ் எடுக்கக்கூடாது என்ற பேச்சு எழுந்துள்ளது. அதற்காகவே இந்தியாவில் திருமண இன்ஷூரன்ஸ் விரைவில் அறிமுகமாக உள்ளது. அதன்படி மோசமான வானிலை, திருட்டு, எமர்ஜென்ஸி போன்ற காரணங்களால் திருமணம் நின்றால் இனி நிதி பாதுகாப்பு கிடைக்கும். ₹7,000 – ₹55,000 வரை பிரீமியம் தொகை செலுத்தி இன்ஷூரன்ஸ் பெற முடியும்.
News December 28, 2025
இந்தியாவிற்காக விளையாடிய பாக். வீரருக்கு நேர்ந்த கதி!

பஹ்ரைனில் நடந்த தனியார் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடிய பாக். கபடி வீரர் உபைதுல்லா ராஜ்புத்தை அந்நாட்டு கபடி கூட்டமைப்பு காலவரையின்றி தடை செய்துள்ளது. இதுகுறித்து பேசிய ராஜ்புத், தான் விளையாடப் போவது இந்திய அணி என்பது தனக்கு தெரியாது. இதற்கு முன்பு தனியார் போட்டிகளில், இருநாட்டு வீரர்கள் ஒன்றாக விளையாடியுள்ளனர், ஆனால் ஒருபோதும் நாட்டின் பெயர்களில் விளையாடியதில்லை எனத் தெரிவித்துள்ளார்.


