News July 4, 2025
க்ரைம் மிரட்டல் நாயகன் மைக்கேல் மேட்சன் காலமானார்

‘Kill Bill’, ‘Reservoir Dogs’ உள்ளிட்ட ஏராளமான க்ரைம் த்ரில்லர் படங்களின் மூலம் இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்சன்(67) காலமானார். நேற்று மாரடைப்பு காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது, மேலாளரும் லிஸ் ரோட்ரிக்ஸ் அறிவித்துள்ளார். சமீப காலமாக சினிமா பிரபலங்கள் பலரும் மாரடைப்பு காரணமாக மரணித்து வருகின்றனர். #RIP
Similar News
News November 10, 2025
5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை

வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன்காரணமாக தமிழகத்தில் வரும் 15-ம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இன்று காலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.
News November 10, 2025
காலையில் எழுந்ததும் இதை மட்டும் செய்யாதீங்க!

உணவு, வேலை என மாறி வரும் வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப, நமது உடலை பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது. அந்த வகையில், நீங்கள் காலையில் எழுந்ததும் செய்யும் 5 விஷயங்கள் உங்கள் நாளை வெகுவாக பாதிக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள். அப்படி, டாக்டர் பிரகாஷ் மூர்த்தி, காலையில் எழுந்ததும் செய்யக்கூடாத 5 விஷயங்களை பட்டியலிட்டுள்ளார். அதை மேலே தொகுத்துள்ளோம். Swipe செய்து தெரிஞ்சுக்கோங்க.
News November 10, 2025
ஆப்கன் – பாகிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தை தோல்வி

துருக்கியில் நடந்து வந்த ஆப்கன் – பாகிஸ்தான் இடையேயான, 3-ம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. பாகிஸ்தானின் நியாயமற்ற கோரிக்கைகள் தான் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததற்கு முக்கிய காரணம் என ஆப்கன் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், போரில் ஈடுபடுவது தங்களது நோக்கமல்ல எனவும், ஆனால், போர் தொடங்கினால், தங்களை தற்காத்து கொள்ள எந்த எல்லைக்கும் செல்ல தயார் என்றும் தெரிவித்துள்ளது.


