News May 8, 2025

மகளிர் தொகை: புதிய ரேஷன் அட்டைதாரருக்கு முன்னுரிமை

image

மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் மாதந்தோறும் பெண்களுக்கு ₹ 1,000 மாநில அரசு வழங்கி வருகிறது. இந்தத் திட்டம் வருகிற ஜூன் மாதம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. அப்போது புதிதாக ரேஷன் அட்டைகள் வாங்கிய குடும்ப பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. திமுக அரசின் ஆட்சியில் 18.46 லட்சம் புதிய அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு அரசு முன்னுரிமை அளிக்கலாம் எனத் தெரிகிறது.

Similar News

News August 22, 2025

TechTalk: WiFi Speed குறையுதா? நீங்களே சரி செய்யலாம்

image

வீட்ல இருக்க சில பொருட்கள், உதாரணத்துக்கு கண்ணாடி, இரும்பு மரச்சாமான், நீர் நிரப்பிய பெரிய குடுவைகள், ப்ளூடூத் சாதனங்கள், இதெல்லாம் WiFi சிக்னலை தடுக்குமாம். இதனால் இன்டர்நெட் வேகம் குறையலாம்னு Experts சொல்றாங்க. இதுக்கு எளிய தீர்வு என்னன்னா, WiFi Router-ஐ வீட்டின் நடுப்பகுதியில், உயரமாக, திறந்த இடத்தில் வைத்து பார்க்கலாம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

News August 22, 2025

சிறுபான்மையினருக்கு நெருக்கடி: CM ஸ்டாலின்

image

சிறுபான்மை மக்கள் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக CM ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு சிறுபான்மை மக்கள் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக குறிப்பிட்ட அவர், மத்திய அரசு வெறுப்புணர்வை தூண்டுவதாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும், மத நல்லிணக்கத்தை கெடுக்க நினைக்கும் கூட்டம் நெடுநாள் இருக்காது என்றும் அவர் எச்சரித்தார்.

News August 22, 2025

ரேஷன் கார்டுக்கு ₹5,000.. CM ஸ்டாலின் முடிவு

image

பொங்கல் பரிசுத் தொகையாக <<17478371>>ரேஷன் கார்டுக்கு ₹5,000<<>> வழங்க CM ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக நேற்று தகவல் வெளியானது. இத்துடன் வழக்கம்போல் வழங்கப்படும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ வெல்லம், முழு கரும்பு, வேட்டி, சேலை உள்ளிட்டவற்றையும் வழங்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி இதற்கான அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட இருப்பதாகவும் அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. SHARE IT

error: Content is protected !!