News May 7, 2025
இட ஒதுக்கீட்டில் 50% உச்சவரம்பு நீக்கப்பட வேண்டும்: ராகுல்

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பதற்கு ராகுல் காந்தி வரவேற்பு தெரிவித்துள்ளார். தங்களது அழுத்தத்திற்கு மத்திய அரசு பணிந்திருப்பதாகவும், அதற்கு தெலங்கானா முன்னோடியாக இருந்ததாகவும் பெருமைப்பட கூறினார். மேலும், இட ஒதுக்கீட்டில் இருக்கும் 50% உச்சவரம்பு நீக்கப்படும் வரை போராட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News January 3, 2026
₹500 நோட்டுகள் செல்லாதா?.. மத்திய அரசு CLARITY

2026 மார்ச் முதல் ₹500 நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்ற தகவல்
SM-ல் பரவி வருகிறது. இந்நிலையில், ₹500 நோட்டுகளின் புழக்கம் நிறுத்தப்படும் என பரவும் செய்தி பொய்யானவை எனவும், இதுகுறித்து ரிசர்வ் வங்கி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் மத்திய அரசு தெளிவுப்படுத்தியுள்ளது. மேலும், இதுபோன்ற வதந்திகளை நம்பி மக்கள் குழப்பமடைய வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News January 3, 2026
70 ஆண்டுகளை கடந்தும் பேசப்படும் ‘ரத்தக்கண்ணீர்’

‘அடியே காந்தா’ என்ற வசனம் தற்போது நகைச்சுவைக்காக பயன்படுத்தப்பட்டாலும், இந்த வசனம் இடம்பெற்ற படம் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் நீங்கவில்லை. M.R.ராதாவின் தனித்துவமான நடிப்பு இன்றும் ரசிக்கப்படுகிறது. திருவாரூர் தங்கராசு எழுத்தில், கிருஷ்ணன் – பஞ்சு இயக்கத்தில் உருவான ‘ரத்தக்கண்ணீர்’, தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தின் கிளாசிக் படங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. படத்தில் பிடித்த சீன் எது?
News January 3, 2026
FLASH: வெனிசுலா அதிபர் சிறை பிடிப்பு

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்க படைகள் சிறை பிடித்து நாடு கடத்திவிட்டதாக டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க அரசியல் சாசனம் மற்றும் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு, <<18750130>>வெனிசுலா மீது தாக்குதல்<<>> நடத்தப்பட்டதாகவும், சில மணி நேரங்களிலேயே மதுரோ சிறைபிடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், வெனிசுலா தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.


