News May 7, 2025
இட ஒதுக்கீட்டில் 50% உச்சவரம்பு நீக்கப்பட வேண்டும்: ராகுல்

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பதற்கு ராகுல் காந்தி வரவேற்பு தெரிவித்துள்ளார். தங்களது அழுத்தத்திற்கு மத்திய அரசு பணிந்திருப்பதாகவும், அதற்கு தெலங்கானா முன்னோடியாக இருந்ததாகவும் பெருமைப்பட கூறினார். மேலும், இட ஒதுக்கீட்டில் இருக்கும் 50% உச்சவரம்பு நீக்கப்படும் வரை போராட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News July 11, 2025
‘செல்லம்மா… செல்லம்மா…’

Checked ஷர்ட், ஜீன்ஸ் பேண்ட்டில் சிம்பிளாக பிரியங்கா மோகன் வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாகி இருக்கிறது. கோல்டன் ஆரோ பாட்டுக்கு டான்ஸ் ஆடி இளைஞர்களின் நெஞ்சில் அம்புவிட்டவர், தற்போது பவன் கல்யாணின் ‘OG’ படத்தில் நடித்து வருகிறார். அவரது போட்டோஸ் பார்த்து, ‘கட்டம் போட்ட சட்டையில் கண்ணழகு நெருப்பாக, ஜீன்ஸ் நடையில் என் நெஞ்சு பனியாக கசிகுற லாவகமா’ என நெட்டிசன்கள் கவிதை பாட தொடங்கிவிட்டனர்.
News July 11, 2025
75 வயதில் ஓய்வு பெற வேண்டும்: மோகன் பகவத்

அரசியல் தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும் என RSS தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். PM மோடிக்கு தற்போது 74 வயதாகும் நிலையில், அடுத்தாண்டு அவரை ராஜினாமா செய்ய வைக்க RSS மறைமுகமாக அழுத்தம் கொடுத்து வருவதாக அரசியல் களத்தில் பேச்சு எழுந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு நாக்பூர் RSS அலுவலகத்திற்கு PM சென்றபோது இது தொடர்பாக பேசப்பட்டதாகவும் சொல்கின்றனர். மோகன் பகவத் கருத்து பற்றி உங்க கமெண்ட் என்ன?
News July 11, 2025
சட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

3 ஆண்டு LLB சட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்க இன்று வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த காலக்கெடுவை நீட்டித்து தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதன்படி, ஜூலை 25-ம் தேதி மாலை 5:45 மணி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் சந்தேகங்களுக்கு 044-24641919 (அ) 24957414 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <