News April 29, 2025
‘பாகிஸ்தான் வாழ்க’ என்றவர் அடித்துக் கொலை

‘பாகிஸ்தான் வாழ்க’ என்று சொன்னதற்காக ஒருவர் அடித்தே கொல்லப்பட்டுள்ள சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவிவரும் சூழலில், மங்களூருவில் கடந்த 27-ம் தேதி நடந்த உள்ளூர் கிரிக்கெட் மேட்சின் போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஒருவர் முழக்கமிட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சிலர் அவரை அடித்தே கொலை செய்துள்ளனர். இதுதொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது.
Similar News
News December 29, 2025
தென்காசி மாவட்ட இரவு நேர ரோந்து பணி விவரம்

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோரும் இரவு ரோந்து பணிக்கு அடியார்கள் நியமனம் செய்து பட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிசம்பர் 29) இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News December 29, 2025
ஆண்மை குறையும்.. ஆண்களே இதை செய்யாதீங்க!

ஆரோக்கியமான விந்தணு (Sperm) உற்பத்தி ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானது. சில தவறான பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகள் விந்தணுக்களின் எண்ணிக்கை, தரம் மற்றும் இயக்கத்தை குறைக்கக்கூடும். விந்தணு உற்பத்தி நல்ல நிலையில் இருக்க மேலே, புகைப்படங்களில் உள்ள பழக்கங்களை தவிர்ப்பது நல்லது. புகைப்படங்களை ஒவ்வொன்றாக ஸ்பை பண்ணுங்க. SHARE பண்ணுங்க
News December 29, 2025
₹79,000 கோடியில் ராணுவத்திற்கு ஆயுதங்கள்

₹79,000 கோடியில் இந்திய முப்படைகளுக்கு தேவையான நவீன ஆயுத தளவாடங்களை வாங்க மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. பீரங்கி படைப்பிரிவுக்கான வெடிமருந்து, இலகுரக ரேடார்கள், ராக்கெட்டுகள், ஒருங்கிணைந்த ட்ரோன் கண்டறிதல் அமைப்பு உள்ளிட்ட பல தளவாடங்கள் வாங்கப்பட உள்ளன. இதை குறிப்பிட்டு இந்திய ராணுவத்தை வலுப்படுத்த பாதுகாப்பு துறை தீவிரமாக பணியாற்றி வருவதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.


