News April 29, 2025
இணையத்தில் டிரெண்டாகும் #ByeByeStalin

2026-ல் திராவிட மாடல் அரசின் ‘2.0’ லோடிங் என சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் பேசியிருந்தார். இந்நிலையில், 2026-ல் தமிழக மக்கள் திமுகவுக்கு தக்க பாடம் புகட்டி வீட்டிற்கு அனுப்புவார்கள் என்பதோடு #ByeByeStalin என அதிமுக ஐடி விங் பதிவிட்டுள்ளது. இதனால், X பக்கத்தில் #ByeByeStalin ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. அதில், ‘2026-ல் ஒரே Version தான் அது TN AIADMK Version’ என அக்கட்சியினர் பதிவிட்டு வருகின்றனர்.
Similar News
News December 30, 2025
BREAKING: வங்கதேச முன்னாள் பிரதமர் காலமானார்

வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமை கொண்ட கலிதா ஜியா (80) காலமானார். அவருக்கு நுரையீரல் பாதிப்பு, நீரிழிவு உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகள் இருந்த நிலையில், நவ.23 – டிச.11 வரை டாக்காவில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2 நாள்களாக அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததாக வங்கதேச தேசியவாத கட்சி (BNP) தெரிவித்துள்ளது. <<-se>>#RIP<<>>
News December 30, 2025
பீரியட்ஸ் பிரச்னை பெருசாகும்: பெண்களே NOTE THIS

PCOS, PCOD அறிகுறிகள் பற்றி சரியாக தெரியாததால் இதனை சில பெண்கள் கவனிப்பது கிடையாது. அதன் அறிகுறிகளை தெரிந்துகொள்ளுங்கள். ➤சீரற்ற மாதவிடாய் சுழற்சி ➤அதிகமாக உடல் எடை கூடுவது/குறைவது ➤கருப்பை கட்டிகள் ➤சரும பிரச்னைகள் ➤சோர்வாகவே இருத்தல் ➤தூக்கமின்மை ➤அதீத ரத்த போக்கு. சில சமயங்களில் PCOS வெளிப்படையான அறிகுறிகளைக் காட்டாது. எனவே, 8 மாதங்களுக்கு ஒருமுறை Ultra Sound எடுப்பது நல்லது. SHARE THIS.
News December 30, 2025
தங்கம் விலை மிகப்பெரிய அளவில் குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) தங்கம் $192.14 (₹17,273) குறைந்து, $4,341.02-க்கு விற்பனையாகி வருகிறது. இது இந்திய சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாள்களாக இந்தியாவில் தங்கத்தின் விலை உச்சத்தில் இருந்து வரும் நிலையில், நேற்றைய நிலவரப்படி சவரன் ₹1,04,160-க்கு விற்பனையானது.


