News April 28, 2025
தோனியின் வரலாற்றில் முதல் முறையாக…

நடப்பு ஐபிஎல் தொடரில் CSK கடைசி இடத்தில் இருப்பதால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவது மிகவும் சிரமம். அப்படி தகுதி பெறாவிட்டால், ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தோனி இல்லாமல் நடைபெறும் IPL final இதுவாகத்தான் இருக்கும். 2008-ம் ஆண்டு IPL தொடங்கியது முதல், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது அவர் இறுதிப்போட்டியில் விளையாடியிருக்கிறார். கடந்த ஆண்டும் CSK ஃபைனலுக்கு தகுதி பெறவில்லை.
Similar News
News December 29, 2025
புத்தாண்டில் வரிசை கட்டும் கார்கள் இவைதான்!

புத்தாண்டை முன்னிட்டு, 2026 ஜனவரியில் முன்னணி கார் நிறுவனங்கள் தங்களது புது மாடல்கள் மற்றும் அப்டேட்டட் வேரியண்ட்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளன. அடுத்த தலைமுறை பெட்ரோல் SUV-கள் முதல் எலக்ட்ரிக் கார்கள் வரை, பல மாடல்கள் விற்பனைக்கு வரிசை கட்டியுள்ளன. அந்த கார் மாடல்களின் போட்டோக்களை மேலே தொகுத்துள்ளோம். அதை Swipe செய்து பாருங்க.
News December 29, 2025
கறிவேப்பிலை ஜூஸின் நன்மைகள்!

உடல்எடையை குறைக்க விரும்பும் நபர்கள், வெறும் வயிற்றில் கறிவேப்பிலை ஜூஸ் குடிக்கலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். அதில் உள்ள நார்ச்சத்து நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்க வைக்கும். உடலில் உள்ள நச்சுகளை நீக்கி நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும். அதோடு ரத்த சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்துகிறது. இதில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளதால், ரத்த சோகை பிரச்னையில் இருந்து நாம் விடுபடலாம்.
News December 29, 2025
உலகின் விஸ்வகுருவாக இந்தியா: மோகன் பகவத்

உலக நலனுக்காக இந்தியா விஸ்வகுருவாக மாற வேண்டும் என மோகன் பகவத் தெரிவித்துள்ளார். விஸ்வகுருவாக இந்தியா மாறுவது நம் லட்சியமல்ல, ஆனால் அது உலகத்தின் தேவை என்று அவர் கூறியுள்ளார். இதற்காக இந்துக்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என வலியுறுத்திய மோகன் பகவத், இந்து தேசத்தின் எழுச்சி தான் சனாதன தர்மத்தின் மறுமலர்ச்சி எனக் குறிப்பிட்டார். அதற்கான காலம் தற்போது வந்துவிட்டதாகவும் அவர் பேசியுள்ளார்.


