News April 4, 2024

ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிகள்

image

ஆன்மாவின் கிரகமாக கருதப்படும் சூரிய பகவான் தற்போது மீன ராசியில் நுழைகிறார். ஏற்கெனவே அங்கு புதன், ராகு உள்ளதால் சூரியனின் சஞ்சாரம் சில ராசிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தப் போகிறது. அந்த வகையில் கடகம், துலாம், தனுசு, மகர ராசியினர் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க உள்ளனர். கொடுக்கல் வாங்கலில் தகராறு, பண முடக்கம், தொழிலில் சுணக்கம், பண வரவு இல்லாதது என பல்வேறு சிக்கல்களை இந்த ராசியினர் அனுபவிக்க உள்ளனர்.

Similar News

News January 4, 2026

சற்றுமுன்: அதிமுகவில் அடுத்த பதவி பறிப்பு

image

அதிமுக வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த வி.எஸ்.பாபு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பணமோசடி, அடிதடி என இவர்மீது அடுக்கடுக்கான புகார்கள் வந்ததன் காரணமாக மா.செ., பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் திருமங்கலம் மோகனை மாவட்ட செயலாளராக நியமனம் செய்ததோடு, வி.எஸ்.பாபுவை அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக மாற்றி EPS உத்தரவிட்டுள்ளார்.

News January 4, 2026

இன்றே கடைசி.. SIR லிஸ்ட்டில் பெயர் இல்லையா

image

SIR லிஸ்ட்டில் பெயர் விடுபட்டு போனவர்கள், தங்களது பெயரை சேர்ப்பதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். ஆன்லைனில் அல்லது BLO-வை நேரில் சந்தித்து உங்கள் பெயரை சேர்த்துக் கொள்ளலாம். <<18628448>>ஆன்லைனில் <<>>விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும். தமிழ்நாட்டில் மொத்தம் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றே கடைசி நாள் என்பதால், நண்பர்கள் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News January 4, 2026

அதிமுக இடத்தை தவெக நிரப்பும்: மாணிக்கம் தாகூர்

image

அதிமுகவின் கடைசி பொ.செ.,வாக EPS இருப்பார் என கூறிய மாணிக்கம் தாகூர், அதிமுகவின் இடத்தை தவெக நிரப்பும் என கூறியுள்ளார். ஏனென்றால் தமிழகத்தில் பாஜகவுடன் எந்த கட்சி கூட்டணி வைத்தாலும், அந்தக் கட்சியும் சேர்ந்து தோல்வியடையும் என்றும் தெரிவித்தார். எம்ஜிஆர் படங்களை முதல் வரிசையில் அமர்ந்து பார்த்த செங்கோட்டையன், தற்போது விஜய்யின் ஜனநாயகனை விசில் அடித்து பார்க்கட்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!