News April 26, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் வருகின்ற ஏப்ரல் 30ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தலைமையில் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது இதனால் தேனி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கி பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளனர்
Similar News
News April 26, 2025
சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் நபர்களுக்கு பரிசு தொகை

தேனி மாவட்டத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்படும் நபர்களை மீட்டு உரிய நேரத்தில் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து, உயிர் காக்க உதவி பணிபுரியும் நபர்களுக்கு, தேசிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தால் மத்திய அரசிடம் இருந்து 5000 ரூபாய் மற்றும் மாநில அரசிடம் 5000 என மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News April 26, 2025
தேனியில் ஏப்ரல் மாதம் இயல்பை விட அதிகளவு மழை

தேனி மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழை அளவான 829.80 மி.மீ.க்கு ஏப்ரல் மாதம் வரை 179.24 மி.மீ பெறப்பட்டுள்ளது. இது இயல்பான மழையளவை காட்டிலும் 32.86 மி.மீ குறைவாகும். ஏப்ரல் மாத இயல்பு மழையளவான 99 மி.மீ-க்கு தற்போது வரை 108.8 மி.மீ மழை பெறப்பட்டுள்ளது. இது ஏப்ரல் மாத இயல்பான மழை அளவை காட்டிலும் 9.8 மி.மீ அதிகமாகும் என தேனி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
News April 26, 2025
விவசாயிகளுக்கு மானியத்தில் நெல் விதை

வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாக நடப்பு பருவத்தில் நெல் விதை தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் கிலோவிற்கு ரூ.20 மானியத்தில் ஒரு விவசாயிக்கு 2 ஹெக்டேர் வரை வழங்கப்பட உள்ளது. அதேபோல் விதை கிராமத் திட்டத்தில் ஒரு கிலோவிற்கு ரூ.20 வீதம் ஒரு ஹெக்டேருக்கு தேவையான விதைகள் மானிய விலையில் வழங்கப்பட உள்ளது என்று தேனி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.