News April 25, 2025
பிளே ஆஃப் ரேஸில் இருந்து வெளியேறிய RR?

ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற ஒவ்வொரு அணியும் கட்டாயமாக 8 போட்டிகளில் வெல்ல வேண்டும். ஆனால், RR அணி 9 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வென்றுள்ளது. இதனால், எஞ்சிய 5 போட்டிகளில் வென்றாலும் அந்த அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வது கடினம்தான். ஒருவேளை மற்ற அணிகளின் ரன்ரேட் குறைவாக இருந்தால் ஒரு வாய்ப்பு கிடைக்கும். ஆனால், அதுவும் ரொம்ப ரொம்ப கஷ்டமே.
Similar News
News April 25, 2025
BREAKING: ஜூலை 12-ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு

மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 12-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3,935 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இன்று (ஏப்.25) முதல் மே 24 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இது குறித்து மேலும் அறிய <
News April 25, 2025
மாநாட்டை புறக்கணித்த முக்கிய துணை வேந்தர்கள்

கவர்னர் தலைமையில் நடக்கும் துணை வேந்தர்கள் மாநாட்டில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. VC சந்திரசேகர் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மதுரை VC பதவி காலியாக உள்ள நிலையில் பதிவாளர் ராமகிருஷ்ணன் மாநாட்டுக்கு செல்லவில்லை. கோவை பாரதியார் மற்றும் வேளாண்மை பல்கலைக்கழங்களில் இருந்தும் மாநாட்டில் பங்கேற்கவில்லை. மொத்தமுள்ள 52 பல்கலை.யில் 34-ல் இருந்து VC பங்கேற்றுள்ளனர்.
News April 25, 2025
ரெட்ரோவின் முதல் விமர்சனம்!

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் மே 1-ம் தேதி ரிலீஸாக இருக்கும் ‘ரெட்ரோ’ பெரிய எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது. படம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் ஆவலில் இருக்கும் நிலையில், படத்தை பார்த்த சூர்யாவிற்கு முழு திருப்தி ஏற்பட்டதாம். நல்லா வந்துருக்கு என சூர்யா தன்னிடம் கூறியதாக கார்த்திக் சுப்புராஜ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். யாரெல்லாம் படம் பாக்க வெயிட்டிங்?