News April 24, 2025

SAY NO TO PSL… அதிரடி நடவடிக்கை

image

IPL போல பாகிஸ்தானில் PSL நடைபெற்று வருகிறது. நடப்பு சீசன் PSL கடந்த 11-ம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. இந்தியாவில் ஃபேன்கோட் இணையதளத்தின் வழியாக PSL-ஐ இந்தியாவில் பார்க்கும் வசதி உள்ளது. பஹல்காம் தாக்குதலையடுத்து இந்தியாவில் PSL ஒளிபரப்பப்படாது. செய்யப்படாது என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 7, 2025

குழந்தைகளுக்கு ஆபத்து.. இதை செய்யவே கூடாது!

image

குழந்தை பிறந்த ஒருசில வாரங்கள் வரை அவர்களுக்கு தொப்புள் கொடியின் ரணம் ஆறாமல் இருக்கும். அதன்மூலம் அவர்களுக்கு தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. எனவே தொப்புளை ஈரமாக வைத்திருக்காதீர்கள். டயப்பர் மாட்டும்போது தொப்புள் மீது உரசாமல் பார்த்துக்கொள்ளுங்கள் தொப்புள் கொடி சிவந்து போய் இருந்தாலோ, துர்நாற்றம் வீசினாலோ அலட்சியம் வேண்டாம். உடனடியான டாக்டரை அணுகுங்கள். SHARE.

News December 7, 2025

இதற்கு அண்ணாமலை ஆவண செய்வாரா? பெ.சண்முகம்

image

திருப்பரங்குன்றம் மலை இந்துக்களுக்கானது என அண்ணாமலை கூறியிருந்தார். இந்நிலையில், இந்துக்கள் என்பது அனைத்து இந்துக்களுக்கு மட்டுமா (அ) குறிப்பிட்ட சாதி இந்துக்களுக்குமா என CPM பெ.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். இந்துக்கள் என்று சொல்லி எத்தனை காலத்துக்கு ஏமாற்றி பிழைப்பீர்கள் என்றும் சாடியுள்ளார். கருவறைக்குள் பட்டியலின இந்துக்கள் பூஜை செய்ய அண்ணாமலை ஆவண செய்வாரா என்றும் சண்முகம் கேட்டுள்ளார்.

News December 7, 2025

கள்ளக்காதல் என்ற ஒன்று இல்லை: சேரன்

image

பெண்ணைதான் காதலிக்க வேண்டும் என்று இல்லை, எந்த ஒரு உயிரின் மீது அன்பு வைத்தாலும் அது காதல்தான் என இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார். புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், காதலில் நல்ல காதல், கள்ளக்காதல் என்றெல்லாம் இல்லை எனவும் விளக்கம் கொடுத்தார். சமூகம் நம் மீது செலுத்தும் ஆதிக்கம்தான் கள்ளக்காதல் எனவும், யாரை காதலிக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ காதலித்து விடுங்கள் என்றும் கூறியுள்ளார்.

error: Content is protected !!