News April 24, 2025
PoK-வில் 42 தீவிரவாத முகாம்கள்

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில், 42 தீவிரவாத முகாம்கள் உள்ளதை இந்திய ராணுவம் அடையாளம் கண்டுள்ளது. அங்கிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த, மேலிட உத்தரவுக்காக 130 தீவிரவாதிகள் காத்திருக்கின்றனர். மேலும், Hizbul Mujahideen தீவிரவாதிகள் 60 பேரும், Jaish-e-Mohammed மற்றும் Lashkar-e-Taiba தீவிரவாதிகள் 17 பேரும், தற்போது காஷ்மீரில் ஆக்டிவாக உள்ளதாகவும் உளவுத் தகவல் வந்துள்ளது.
Similar News
News April 24, 2025
காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை: அம்பானி

பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு மும்பையில் உள்ள ரிலையன்ஸ் அறக்கட்டளை ஹாஸ்பிடலில் இலவச சிகிச்சை வழங்கப்படும் என அம்பானி அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்த அவர், தீவிரவாதத்தை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என கூறியுள்ளார். மேலும், தீவிரவாதத்திற்கு எதிரான அரசின் நடவடிக்கைகளுக்கு ரிலையன்ஸ் குடும்பம் துணை நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News April 24, 2025
தாக்குதல் பின்னணியில் மோடி, அமித் ஷா: அசாம் MLA புகார்

பஹல்காம் தாக்குதல் பின்னணியில் மோடி அரசு இருப்பதாக அசாம் MLA அமினுல் இஸ்லாம் குற்றஞ்சாட்டியுள்ளார். புல்வாமா தாக்குதலில் மத்திய அரசின் பங்கு இருப்பதாக தான் நம்புவதாகவும், அதனால்தான் 2019 மக்களவை தேர்தலில் பாஜகவால் வெல்ல முடிந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அதேபோல்தான், தற்போதைய பஹல்காம் தாக்குதல் பின்னணியிலும் மோடி, அமித்ஷா இருப்பதாகவும், உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
News April 24, 2025
பள்ளியை விட கல்லூரிகளுக்கு 15 நாள்கள் கூடுதல் விடுமுறை

இறுதித்தேர்வு இன்றுடன் முடிந்த நிலையில், அனைத்து பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் ஜூன் 1-ம் தேதி வரையும், கல்லூரி மாணவர்களுக்கு ஜூன் 16-ம் தேதி வரையும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பள்ளி மாணவர்களை விட, கல்லூரி மாணவர்களுக்கு 15 நாள்கள் கூடுதல் விடுமுறையாகும். எனவே, வெளியூர் மற்றும் சுற்றுலா செல்வோர் இப்போதே பயணத்திற்கான திட்டத்தை தயார் செய்யுங்கள்.