News April 24, 2025
AK சென்னை வர காரணம் இதுவா?

விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களை முடித்து கொடுத்துவிட்டு ரேஸ் களத்திற்குச் சென்று அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்து வரும் அஜித்குமார், திடீரென சென்னை திரும்பியுள்ளார். காரணம், இன்று அஜித்குமார் – ஷாலினி தம்பதிக்கு 25-வது திருமண நாளாம். அமர்க்களம் படத்தின்போது உருவான காதல் பயணம் 2000-ம் ஆண்டில் திருமணத்தில் முடிந்தது. உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு..
Similar News
News April 24, 2025
காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை: அம்பானி

பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு மும்பையில் உள்ள ரிலையன்ஸ் அறக்கட்டளை ஹாஸ்பிடலில் இலவச சிகிச்சை வழங்கப்படும் என அம்பானி அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்த அவர், தீவிரவாதத்தை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என கூறியுள்ளார். மேலும், தீவிரவாதத்திற்கு எதிரான அரசின் நடவடிக்கைகளுக்கு ரிலையன்ஸ் குடும்பம் துணை நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News April 24, 2025
தாக்குதல் பின்னணியில் மோடி, அமித் ஷா: அசாம் MLA புகார்

பஹல்காம் தாக்குதல் பின்னணியில் மோடி அரசு இருப்பதாக அசாம் MLA அமினுல் இஸ்லாம் குற்றஞ்சாட்டியுள்ளார். புல்வாமா தாக்குதலில் மத்திய அரசின் பங்கு இருப்பதாக தான் நம்புவதாகவும், அதனால்தான் 2019 மக்களவை தேர்தலில் பாஜகவால் வெல்ல முடிந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அதேபோல்தான், தற்போதைய பஹல்காம் தாக்குதல் பின்னணியிலும் மோடி, அமித்ஷா இருப்பதாகவும், உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
News April 24, 2025
பள்ளியை விட கல்லூரிகளுக்கு 15 நாள்கள் கூடுதல் விடுமுறை

இறுதித்தேர்வு இன்றுடன் முடிந்த நிலையில், அனைத்து பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் ஜூன் 1-ம் தேதி வரையும், கல்லூரி மாணவர்களுக்கு ஜூன் 16-ம் தேதி வரையும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பள்ளி மாணவர்களை விட, கல்லூரி மாணவர்களுக்கு 15 நாள்கள் கூடுதல் விடுமுறையாகும். எனவே, வெளியூர் மற்றும் சுற்றுலா செல்வோர் இப்போதே பயணத்திற்கான திட்டத்தை தயார் செய்யுங்கள்.