News April 24, 2025
ரோஹித்துக்கு வந்த சோதனை.. 9 வருஷத்துல இதுதான் ஃபர்ஸ்ட்!

ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா தொடர்ச்சியாக 2 போட்டிகளில் அரைசதம் விளாசுவது 9 ஆண்டுகளில் இதுதான் முதல்முறையாம். CSK, SRH அணிகளுக்கு எதிராக தற்போது தொடர்ச்சியாக அரைசதம் அடித்த அவர், இதற்கு முன்பு 2016-ஆம் ஆண்டில் KKR, RPS அணிகளுக்கு எதிராக அரைசதம் அடித்திருக்கிறார். தொடக்க ஆட்டக்காரராக விளையாடும் ரோஹித் சர்மாவிற்கு இது ஒரு மோசமான சாதனைதான் என நெட்டிசன்கள் கமெண்ட் அடிக்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
Similar News
News August 18, 2025
ராதாகிருஷ்ணன் என்றால் அர்ப்பணிப்பு: PM மோடி

NDA கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள CP. ராதாகிருஷ்ணனுக்கு PM மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒரு MP-யாகவும், கவர்னராகவும் ராதாகிருஷ்ணனுக்கு அதிக அனுபவம் உள்ளதாகவும், பொது வாழ்வில் அவர் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதாகவும் PM கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் NDA அதிக MP-க்களை கொண்டுள்ளதால், ராதாகிருஷ்ணனே துணை ஜனாதிபதி ஆவார் என்றே கூறப்படுகிறது.
News August 18, 2025
மத்திய அரசின் உயரிய பொறுப்புகளில் தமிழர்கள்!

நாட்டின் 2-வது உயரிய பொறுப்பான துணை ஜனாதிபதிக்கான ரேஸில் சி.பி.ராதாகிருஷ்ணனை பாஜக களமிறக்கியுள்ளது. ஏற்கெனவே, மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சராக ஜெய்சங்கர், தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளத்துறை இணையமைச்சராக எல்.முருகன் ஆகியோர் பதவி வகிக்கின்றனர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு(1952–1962) பிறகு தமிழகத்தை சேர்ந்த ஒருவர் துணை ஜனாதிபதியாகும் வாய்ப்பு அமைந்துள்ளது.
News August 18, 2025
ராசி பலன்கள் (18.08.2025)

➤ மேஷம் – அச்சம் ➤ ரிஷபம் – சுகம் ➤ மிதுனம் – ஆக்கம் ➤ கடகம் – கவனம் ➤ சிம்மம் – ஆர்வம் ➤ கன்னி – சிரமம் ➤ துலாம் – ஊக்கம் ➤ விருச்சிகம் – நலம் ➤ தனுசு – சுபம் ➤ மகரம் – இரக்கம் ➤ கும்பம் – ஜெயம் ➤ மீனம் – புகழ்.